சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் விடிய விடிய இடைவிடாமல் கனமழை பெய்த நிலையில், மோசமான நிலை முடிந்துவிட்டதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்று தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் 15 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மாநகராட்சியின் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:
‘மோசமான நிலை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் அவ்வப்போது மழை பெய்யும். மாலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடசென்னை-ஸ்ரீஹரிகோட்டா பகுதியை கடக்கும் வரை காற்று வீசும். சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டில் சராசரியாக 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று நீண்ட இடைவெளிகளிலேயே மழை பெய்யும். இன்றைக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு அபாயகர சூழல் ஏதுமில்லை. காற்றும் மட்டும் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் புள்ளி வலுவிழந்ததாகக் காணப்படுகிறது’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Worst is over and occasional rains will happen. It will be windy till Depression crosses North Chennai-Sriharikota belt by evening. On average 150 mm rainfall reported in Chennai and KTC belt and some stations 200 mm too.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 11, 2021
Rainfall recorded lake inflows - https://t.co/WoUHUGXbJs pic.twitter.com/LQek7wtBd9
சென்னையில் மழையளவு: (mm)
தாம்பரம் - 233
சோழவரம் - 220
எண்ணூர்- 207
குமிடிபூண்டி- 184
ரெதில்ஸ் - 180
மாமல்லபுரம்- 169
ஆல்வார்பேட்- 162
நுங்கம்பாக்கம்- 157
டிஜிபி அலுவலகம் மயிலாப்பூர் - 157
பெரம்பூர்- 157
எம்ஆர்சி நகர்- 151
தாமரைப்பாக்கம்- 149
அம்பத்தூர்- 149
கே.கே.நகர்- 145
மீனம்பாக்கம்- 144
அயனாவரம்- 144
ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (வானகரம்) - 142
தரமணி- 140
அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி) - 139
கத்திவாக்கம் - 137
செம்பரம்பாக்கம்- 135
வில்லிவாக்கம் - 131
முகப்பேர் - 130
மணலி - 128
பொன்னேரி - 125
சத்யபாமா பல்கலைக்கழகம் (சோழிங்கநல்லூர்) - 124
ஆலந்தூர்- 121
அண்ணா நகர் - 120
தொண்டியார் பேட்- 120
கேளம்பாக்கம்- 119
திருப்போரூர் - 117
திருவொற்றியூர்- 115
திருக்கழுகுன்றம்- 113
மேற்கு தாம்பரம்- 111
செங்கல்பட்டு- 104
இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (கேளம்பாக்கம்) - 103
ஸ்ரீபெரும்புதூர்- 102
திருவள்ளூர்- 100
செய்யூர்- 100