20 வருட கள்ளக் காதலியை பிரிந்த 80 வயது தாத்தாவை, “என் அக்காவை ஏன்டா தனியா தவிக்க விட்டுட்டு போன?” என்று, 4 புள்ளிங்கோ சேர்ந்து அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலம் பகுதியைச் சேர்ந்த 80 வயதான முனியசாமி, தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இப்படியாக, தனது 60 வயது வரை தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த முனியசாமி, தனது 60 வயது நடக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற பெண்ணுடன் அறிமுகம் ஆகி, நெருங்கி பழகிய நிலையில், அவர்களுக்குள் கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது.
இந்த கள்ளக் காதல் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர்.
அதே நேரத்தில், ஒரு கட்டத்தில் அந்த பெண் வள்ளியை விட்டு பிரிந்து இருக்க முடியாது நிலைமைக்கு வந்த அந்த நபர், தனது மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிந்து கள்ளக் காதலி வள்ளியுடனேயே வந்து தங்கி விட்டார்.
அதன்படி, முனியசாமியும் - வள்ளியும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி உல்லாசமாக வாழத் தொடங்கினர்.
இப்படியாக, இந்த கள்ளக் காதல் ஜோடி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.
இந்த சூழலில் தான், தற்போது முனியசாமிக்கு 80 வயதாகிவிட்டதால், அவரது உடல் நிலை சற்று மோசமாகி உள்ளது. இதனால், கடந்த ஆண்டு தன் குடும்பத்திற்கே அவர் திரும்பி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 80 வயதான முனியசாமி அங்குள்ள ஒரு டீக்கடைக்கு சென்று உள்ளார்.
அப்போது, அங்கு வந்த வள்ளியின் உறவுக்கார இளைஞர்களான 28 வயதான முனீஸ்வரன், சரவணக்குமார், நிர்மல்குமார், முனீஸ்வரன் ஆகிய 4 பேரும் முனியசாமியை வழி மறித்தி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், “எங்க அக்கா வள்ளியை தனியா விட்டுட்டு ஏன்யா போனே? அங்க, அவ அனாதையாக தவிக்கிறாள்.. நீ மட்டும் உன் குடும்பத்துடன் சொகுசா வாழ்றியா?” என்று, சத்தம் போட்டுக்கொண்டே, முனியசாமியை கீழே தள்ளி விட்டு அவரை ஏறி மிதித்து கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதில், பலத்த காயம் அடைந்த அவர், பேச்சுமூச்சு இல்லாமல் அங்கேயே மயக்கமடைந்து உள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முனியசாமி வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து, முனியசாமி மகன் முனீஸ்வரன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த 4 பேரையும் கைது செய்து, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பான வழக்கு, சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இதனையடுத்து, அவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.