கொரோனாவுக்கு உயிரிழந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
By Aruvi | Galatta | Apr 24, 2020, 11:01 am
கொரோனா வைரசால் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் உயிரிழந்துள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகையே திக்குமுக்காடச் செய்து, திணறடித்து வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இந்த வைரசுக்கு சாதி, மதம் பார்க்கத் தெரியாது என்று சமீபத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்து இருந்தார்.
அத்துடன், இந்த கொரோனா வைரஸ், பணக்காரர்களின் நோய் என்று, முதலமைச்சர் பழனிசாமி கடந்த வாரம் கருத்து தெரிவித்து இருந்தார்.இப்படிப்பட்ட இந்த கொரோனாவுக்கு உலகம் முழுக்க உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் உயிரிழந்துந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி, நடிகை மற்றும் பாடகியான ரீட்டா வில்சன், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இங்கிலாந்து நடிகர் இத்ரிஸ் எல்பா, பாடகி பிங்க் மற்றும் பாடகர் பிளேசிடோ டோமிங்கோ உள்ளிட்ட பல பிரபலங்களையும் கொரோனா விட்டு வைக்காமல், தாக்கி உள்ளது. இதனையடுத்து, அவர்கள் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர்.
அதேபோல், நைஜீரியா நாட்டின் உயர் பதவி வகித்த, அதிபருக்கு ஆலோசகராக இருந்த அப்பா கியாரி, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார்.
துருக்கி நாட்டின் அரசியல்வாதி மற்றும் சுதந்திர துருக்கி கட்சி தலைவரான 73 வயதான ஹைதர் பாஸ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்தார்.
ஸ்பெயின் நாட்டின் சான்டேன்டர் என்ற பெரிய வங்கியின் போர்ச்சுகல் பிரிவு தலைவராக இருந்த 73 வயதான ஆன்டனியோ வியர்ரா மோன்டீரோ, கடந்த மார்ச் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.
ஆப்ரோ-ஜாஸ் இசை பிரபலமான 86 வயதான மனு திபாங்கோ, கடந்த மார்ச் 24 ஆம் தேதி உயிரிழந்தார்.
பிரபல செப் மற்றும் அமெரிக்காவின் டாப் செப் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 வின்னரான பிளாய்ட் கார்டோஜ், கடந்த மார்ச் 25 ஆம் தேதி உயிரிழந்தார்.
புடாபெஸ்ட் நாட்டுக்கான இங்கிலாந்து தூதரகத்தின் துணை தலைவர் ஸ்டீவன் டிக், கடந்த மார்ச் 25 ஆம் தேதி உயிரிழந்தார்.
இங்கிலாந்து நாட்டின் லங்காஷைர் கிரிக்கெட் கிளப் தலைவர் டேவிட் ஹாட்ஜ்கிஸ் கடந்த மார்ச் 30 ஆம் தேதி உயிரிழந்தார்.
ஐ லவ் ராக் அண்டு ரோல் பாடலாசிரியர் ஆலன் மெர்ரில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி உயிரிழந்தார்.
ஜப்பான் நாட்டின் சிறந்த காமெடியனான கென் ஷிமூரா கடந்த மார்ச் 30 ஆம் தேதி உயிரிழந்தார்.
நாஜி படைகளிடம் இருந்து பாரீஸ் நகரை விடுவித்த முதல் ஸ்பானிஷ் படை பிரிவின் கடைசி நபராக உயிர் வாழ்ந்த ரபேல் கோம்ஸ் நியோட்டோ, கடந்த மார்ச் 31 ஆம் தேதி உயிரிழந்தார்.
சோமாலியாவின் முன்னாள் பிரதமர் நூர் ஹசன் மற்றும் செர்பியா நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் பிளேசிக் ஆகியோர், கடந்த 1 ஆம் தேதி உயிரிழந்தனர்.
காமெடி நடிகர் 78 வயதான எட்டீ லார்ஜ், கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார்.