கோல்டன் விசா பெற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சலுகை - துபாய் அரசு அறிவிப்பு

கோல்டன் விசா பெற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சலுகை - துபாய் அரசு அறிவிப்பு - Daily news

கோல்டன் விசா பெற்றவர்கள் துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

UAE GOVT

அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. கோல்டன் விசா பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள் அந்நாட்டின் குடிமக்களைப்போல் வாழலாம்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றவர்கள் இனி துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பயிற்சி வகுப்புகளில் சேர வேண்டிய கட்டாயமில்லை என அந்நாட்டு சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. 

மேலும் இது குறித்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா பெற்றவர்கள் துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஓட்டுநர் பயிற்சி எடுக்காமல் தன் சொந்த நாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்தே விண்ணப்பிக்கலாம். துபாயில் வைக்கப்படும் சாலை தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட்டால் உடனே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நடிகை திரிஷா, அமலாபால், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது. தமிழகத்திலிருந்து கோல்டன் விசாவை பெற்ற முதல் பெண் மருத்துவர் நஸ்ரின் பேகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய  அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். பார்த்திபன் இது குறித்து அவர் கடந்த மாதம் தனது டுவிட்டர் பதிவில் கோல்டன் விசா துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த ஜுமா அல்மேரி குழுமம்-முகமது ஷானித் (CEO) & இதர நண்பர்கள் சொன்னார்கள். VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது என பதிவிட்டுள்ளார். 

Leave a Comment