அரசு விடுதியை திடீரென்று ஆய்வு செய்து சமையல் செய்து அசத்திய சென்னை கலெக்டர்!
சென்னையில் உள்ள அரசு விடுதியை திடீரென்று ஆய்வு செய்த சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி IAS, அங்கு சமையல் செய்து அசத்திய சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியானது இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் படி, அமைச்சர்கள் செங்கோல் வழங்க, சென்னையின் இளம் வயது மேயர் பிரியா ராஜன், இன்று காலையில் சென்னையின் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் கவிஞரும், எழுத்தாளருமான சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி IAS, இன்றைய தினம் சென்னையில் உள்ள அரசு விடுதிகளை திடீரென்று ஆய்வு செய்தார்.
அதன் படி, திடீர் விசிட் அடித்த சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி IAS, இன்றைய தினம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் விடுதிகளுக்குள் சென்று, திடீரென்று சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அந்த விடுதியின் வாடன்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், அங்குள்ள நிறை குறைகளைக் கேட்டறிந்தார்.
அத்துடன், அந்த விடுதி பராமரிப்புகளை ஆய்வு செய்துவிட்டு, அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த சமையல் கூடத்திற்குள் மாவட்ட ஆட்சியர் சென்றார்.
அப்பொழுது, அந்த விடுதியின் சமையல் கூடத்தில் மதியம் வேளைக்கான சமையல் நடந்துகொண்டிருந்தது.
அப்போது, அந்த சமையல் கூடத்தில் வாழைக்காய் பொரியல் தயார் செய்யச் சமையல்கள் தயாராகிக்கொண்டிருந்ததைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் விஜயாராணி IAS, தானே முன் வந்து வாழைக்காய் பொரியல் செய்தும், அதை எப்படித் தயாரிக்க வேண்டும் என்றும், அங்கிருந்து சமைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவர் சொல்லிக் கொடுத்தார்.
மேலும், அரசு விடுதியைச் சேர்ந்த மாணவிகளுக்கு வாழைக்காய் பொரியல் செய்த மாவட்ட ஆட்சியர் விஜயாராணி IAS, அதனைச் சுவைத்துப் பார்த்து, “எப்படி வந்திருக்கிறது?” என்று ருசியும் பார்த்தார்.
குறிப்பாக, “அந்த விடுதியில் சமைக்கும் உணவின் தரம் எப்படி இருக்கிறது?” என்பது குறித்தும், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி IAS, ஆய்வு செய்தார். இதனையடுத்து, மற்றொரு அரசு விடுதியை ஆய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் விஜயாராணி IAS, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே, சென்னையில் உள்ள அரசு விடுதியை திடீரென்று ஆய்வு செய்த சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி IAS, தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.