புகார் கொடுக்க சென்ற திருநங்கைக்கு பாலியல் தொல்லை கெடுத்த போலீஸ்!
“புகார் கொடுக்க சென்ற திருநங்கைக்கு, போலீசார் ஒருவர் குடிபோதையில் இருந்து பாலியல் தொல்லை கெடுத்ததாக” பாதிக்கப்பட்ட திருநங்கை குற்றம்சாட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அதுவும் கோவை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதான திருநங்கை உமாஸ்ரீ என்பவர், தன்னுடைய செல்போன் தொலைந்து விட்டதாக கூறி, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையயமான பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்று உள்ளார். அங்கு, புகாரை கொடுத்து விட்டு
இதனையடுத்து, புகார் அளித்த திருநங்கை உமாஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற போலீஸ் மூவேந்தன் வேல்பாரி என்பவர் சென்று உள்ளார். அங்கு, உமாஸ்ரீயிடம் அவர் விசாரணை நடத்தியிருக்கிறார்.
இந்த விசரணையின் போது, உமாஸ்ரீயிடம் அந்த போலீஸ் மூவேந்தன் என்பவர், அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த 30 வயதான திருநங்கை உமாஸ்ரீ, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால், அந்த போலீஸ்காரர் மூவேந்தன் அங்கிருந்த சென்ற நிலையில், அங்குள்ள பந்தயசாலை காவல் நிலையத்திற்கு சென்ற பாதிக்கப்பட்ட திருநங்கை உமாஸ்ரீ, தனது வீட்டிற்கு விசாரணைக்கு வந்த போலீசார் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக புகார் அளித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், “எனது வீட்டிற்கு விசாரணைக்கு வந்த போலீஸ் மூவேந்தன், குடிபோதையில் இருந்ததாகவும் அப்போது என்னை அவர் தரக்குறைவாக பேசியதுடன், பாலியல் தொல்லை அளித்ததாகவும்” குற்றம்சாட்டி உள்ளார்.
பாதிக்கப்பட்ட திருநங்கை உமாஸ்ரீயின் புகாரை பெற்றுக்கொண்ட பந்தயசாலை காவல் நிலைய போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், உயர் அதிகாரிகளின் உத்தரவின் போரில், பந்தயசாலை காவல் நிலைய போலிசார், காவலர் மூவேந்தன் மீது தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, திருநங்கை ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம், சக போலீசர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.