“பாஜகவுக்கு வாக்களித்தால் 5 லட்சம் காப்பீடு” என்று வடிவேலு பட காமெடி போல் போலியான வங்கியின் பெயரில் செக் தயாரித்து திமுகவினரிடமே பாஜகவினர் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறுவதை யொட்டி, நேற்ற மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரசசாரம் நிறைவடைந்து உள்ளது. இதனால், தமிழகத்தில் ஒட்டு மொத்த அரசிகள் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களாக என்று பலரும் களம் கண்டுள்ளதால், தமிழக அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கிறது.

இதனால், தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அரசியல் களமான பண மழை, பற்பல வாக்குறுதிகள், ஆள் கடத்தல், அடி தடி என்று, பல விதமான சம்பவங்களால் அதகளம் ஆகிக்கொண்டிருக்கிறது.

அதாவது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் நேற்று மாலை 6 மணி வரை ஈடுபட்டு வந்தனர்.

அதுவும், நாளைய தினம் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

வருவாய்த்துறை அதிகாரிகள் காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழக்ததின் சில இடங்களில் பரிசு பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் புதுமைப் பெண் வங்கி என்று, இல்லாத ஒரு வங்கியின் பெயரில் பாஜகவினர் “5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்” என்று, பொது மக்களுக்கு போலியான செக் அளித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு பகுதியில் 110 வது வார்டு பாஜக சார்பில் வேட்பாளராக டாக்டர் ராஜசேகர் போட்டியிடுகிறார். 

இதனால், அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலரும் அந்த பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது, “பாஜகவுக்கு வாக்களித்தால் 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்” என்பது மாதிரி, வங்கியின் காசோலைகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். 

அதுவும், “புதுமைப்பெண் வங்கி” என்ற ஒரு புதிய பெயரில் தயாரிக்கப்பட்டு இருந்த அந்த காசோலையில், கொடுப்பவர் பெயரில் வேட்பாளரான டாக்டர் ராஜசேகர் கவுன்சிலர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை, ஒரு சில பாஜகவினர், புஷ்பா நகர் பகுதிக்குச் சென்று அங்கிருந்தவர்கள் திமுக உறுப்பினர் என்று தெரியாமலேயே, திமுகவினருக்கு கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த திமுகவினர், போலி காசோலைகளை கொடுத்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது  பாஜக தொண்டர்கள் 3 பேர் சிக்கி உள்ளனர். 

அவர்களை பிடித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம், திமுக உறுப்பினர்கள் ஒப்படைத்தனர். 

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், பாஜக தொண்டர்கள் 3 பேர் பெண்கள் இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.