“நடிகை காயத்ரி ரகுராம் நிர்வாகிகளை நீக்கம் செய்தது செல்லாது” அண்ணாமலையின் அறிவிப்பால் பாஜகவில் பெரும் பரபரப்பு..
“நடிகை காயத்ரி ரகுராம் கட்சி நிர்வாகிகளை தன்னிச்சையாக நீக்கம் செய்தது செல்லாது” என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது, பாஜகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த காலங்களில் நடிகையும், பாஜகவின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வரும் காயத்ரி ரகுராம், எது பேசினாலும் அது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வந்தது.
அதாவது, தமிழக பாஜகவின் பல்வேறு பிரிவுகளுள் ஒன்றாக இருக்கும் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார்.
அத்துடன், நடிகை காயத்ரி ரகுராம் பிரபல டான்ஸ் மாஸ்டரான ரகுராமின் மகள் ஆவார்.
நடிகை காயத்ரி ரகுராம், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “சார்லி சாப்ளின்” படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அத்துடன், நடிகை காயத்ரி ரகுராம், கடந்த 2019 ஆம் ஆண்டு வரை, தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். அதன் பிறகே, கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் பாஜகவில் தன்னை இணைந்துக்கொண்டு, கட்சி பணிகளை செய்து வருகிறார்.
இப்படியான சூழலில் தான், கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி “கலை கலாச்சார பிரிவில் இருந்து மாநில செயலாளர்கள் சிலரை நீக்குவதாக” அந்த பிரிவின் தலைவராக இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம் தனது லெட்டர் பேடில் அறிவிப்பு ஒன்றை அதிரடியாக வெளியிட்டார்.
அதில், “தனது அணியில் சில நிர்வாகிகள் செயல்பாடின்றி இருப்பதகாவும், சிலர் அணியின் தலைமைக்கு எதிராக செயல்படுவதால் கட்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது என்றும், தற்போது நீக்கப்பட்டவர்களுக்கு கட்சியில் வேறு சில பதவிகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றும், அந்த அறிவிப்பில் நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்திருந்தார்.
அதன்படி, “தமிழ் சினிமாவின் பிரபலங்களாகவும், சினிமா முன்னோடிகளாக இருந்து வரும் ஃபெப்சி சிவா, தயாரிப்பாளர்கள் அழகன் தமிழ்மணி, பாபு கனேஷ், உமேஷ் பாபு, விருகை வெங்கடேஷ், சர்மா” உள்ளிட்டோர் நடிகை காயத்ரி ரகுராமால் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
அப்போது, நடிகை காயத்ரி ரகுராமானின் இந்த அதிரடி முடிவால் பாஜகவில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
அத்துடன், “மாநில அளவில் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தேசிய தலைமையின் ஒப்புதலுடன் தான் நடக்க வேண்டும் என்றும், கட்சி விதிக்கு மாறாக நடிகை காயத்ரி ரகுராம் தன்னிச்சையாக செயல்பட்டு கட்சியின் நிர்வாகிகளை நீக்கியது, பாஜகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், அருவக்கு எதிரான விமர்சனத்திற்கும் வித்திட்டது.
அதன் தொடரச்சியாக, “ஜனனி நாராயணன், ஜனனி கிருஷ்ணமூர்த்தி, ரேகா துரைலிங்கம், இயக்குனர் திருமலை என 8 பேரை புதிதாக மாநில நிர்வாகிகளாக நியமிப்பதாகவும், எனது முடிவை கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆதரிப்பார் என நான் நம்புகிறேன்” என்றும், நடிகை காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகை காயத்ரி ரகுராமின் இந்த தன்னிச்சயான போக்கு, பாஜகவில் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், “நடிகை காயத்ரி ரகுராம், பாஜக நிர்வாகிகளை நீக்கியது செல்லாது” என, பாஜகவின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்தார்.
இது குறித்து, கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1.2.2022 அன்று கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம், அந்த பிரிவின் நிர்வாகிகள் மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தார் என்றும், அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டபடி இல்லாமல், கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள், அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது” என்று, அறிக்கையில் கூறி உள்ளார்.
குறிப்பாக, “நடிகை காயத்ரி ரகுராம் தன்னிச்சையாக நிர்வாகிகளை நீக்கம் செய்ததும், அவர் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது” என்று, பாஜக தலைமை தற்போது அறிவித்திருப்பது தமிழ்க பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.