இன்றைய கல்வி முறை குறித்து, பல மாற்றுக் கருத்துகளை நிலவி வரும் சூழலில், மாற்று கல்விமுறை குறித்து சிறந்த ஒரு சிந்தனையை உடையவர், டாக்டர் மரியசீனா ஜான்சன். இவர் தனி திறமையுடன் கூடிய ஒரு பன்முக செயற்பாட்டாளர். இவரின் தலைமையின் கீழ் இயங்கி வரும் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பலத் துறைகளில் சாதனைகள் படைத்துள்ளது. தரமான கல்வியின் மூலம் சமூகத்தில் நல்லதொரு மாற்றம் கொண்டு வர, தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் மரியசீனா.


பல புதிய தொழில்நுட்பங்களை சத்யபாமாவின் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தியது முதல் அந்த பல்கலைக்கழத்தின் வளர்ச்சி வரை அதில் மரியசீனாவுக்கு முக்கிய பங்குள்ளது. இவர் தொடங்கிய ’அன்பு அறக்கட்டளை’ மூலம், ஒவ்வொரு வருடமும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு உதவித்தொகையுடன் பயனடைந்து வருகிறார்கள். 


மேலும் அடிப்படை தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சீர்மைத்து மேம்படுத்துவதன் மூலம், கல்வியின் தரம் உயர்வதற்கு வாய்ப்பாக அமையும் என “சப்போர்ட் மை ஸ்கூல்” திட்டத்தின் கீழ் 15 பஞ்சாயத்து பள்ளிகள் மற்றும் 7 கிராமங்களை தத்தெடுத்துள்ளார். 

sathayabama
பள்ளிபடிப்பை தொடர முடியாமல் சென்றவர்களுக்கும் மற்றும் கிராமப்புர இளைஞர்களுக்கும், அவர்களில் மேம்பாட்டிற்காக தொழிற்கல்வி படிப்புகளை( Vocational courses) இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

மரியசீனாவின் இதுபோன்ற சேவைகள் சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டுடன் நின்றுவிடவில்லை. சிவில் போரில் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டு மாணவர்களுக்கு உதவிடும் வகையில், தவக்கோல் கர்மனுடன் ( Tawakkol Karman) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏமனின் தவக்கோல் கர்மன் சர்வதேச அறக்கட்டளையின் மூலம் 15 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்.


இவரின் தலைமையின் கீழ், சத்யபாமாவின் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் முதல் வெற்றிகரமான முயற்சியில் உருவானது தான் SATHYABAMASAT என்ற செயற்கைக்கோள். இந்த செயற்கைக்கோள் இஸ்ரோ மூலம் 19 செயற்கைக்கோள்களுடன் ஒன்றாக சேர்ந்து 22 ஜூன், 2016 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பெரிதும் பாராட்டியுள்ளார். 


மேலும் பல அறக்கட்டளைகளை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் பல ஆதரவற்ற இல்லங்களுக்கு தினசரி உணவுகளை வழங்குகிறார். சிறந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவாதிகளை மட்டும் உருவாக்காமல், சிறந்த அரசு அதிகாரிகளையும் உருவாக்குவதற்காக JEPPIAAR IAS ACADEMY மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1000 பேருக்கு இலவச பயிற்சி அளித்துவருகிறார். 


இவரின் இத்தனை சேவகளையும் செயல்பாடுகளையும் அங்கரிக்கும் விதமாக, நம் நாட்டின் நிதி ஆயோக் மற்றும் ஐ.நாவின் ( Niti Aayog and UN in India) தலைசிறந்த 12 பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

maria award
மேலும் சமூதாயத்தில் நல்லதொரு தாக்கத்தை உருவாக்க கூடிய 100 தலைச்சிறந்தப் பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவரால் கெளரவிக்கப்பட்டுள்ளார். 


இவ்வாறு கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுகளில் பல வகை பங்களிப்புகளை தொடர்ந்து அளிப்பது மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை உயர்த்த, வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர்களையும் உருவாக்கி வரும் டாக்டர் மரியசீனா ஜான்சனுக்கு இன்று பிறந்தநாள்..

டாக்டர் மரியசீனா ஜான்சன் அவர்களுக்கு கலாட்டா நிறுவனம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!