“முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய ஆசை இருப்பதாக” உலகின் மிகப் பெரிய செல்வந்தரான பில் கேட்ஸ் வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர் 65 வயதான பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனராக தற்போது வரை இருந்து வருகிறார்.
பில்கேட்ஸ் மனைவி 56 வயதான மெலிண்டா கேட்ஸ், அவருடன் வாழ்ந்து வந்த நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு “ரோரி ஜான் கேட்ஸ், ஜெனிபர் கேதரின் கேட்ஸ், போப் அடில் கேட்ஸ்” என மொத்தம் 3 வாரிசுகள் உள்ளனர்.
அத்துடன், கடந்த ஆண்டு நிலவரப்படி பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 9 லட்சத்து 74 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக இருந்தது. இதனால், உலக பணக்காரர்களின் வரிசையில் அவர் கடந்த ஆண்டு 4 ஆம் இடத்திலும் இருந்தார். இந்த சூழ்நிலையில் தான், உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸ், தன்னுடைய 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
தாவது, பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியர் கடந்த ஆண்டே பிரிந்து விட்டனர். இது பற்றி, கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி முறையான அறிவிப்பு வெளியானது.
அதாவது, “பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்று வரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், மிக நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் காரணத்தால், அவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக” அமெரிக்க ஊடகங்கள் அப்போது மிக கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியானது.
அத்துடன், “பில்கேட்ஸ் உடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 66 வயதான ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன், அமெரிக்காவில் நிதி சார்ந்த தொழில்களில்” ஈடுபட்டு வந்தவர்” என்றும், கூறப்பட்டது.
குறிப்பாக, “மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன், பில்கேட்ஸ் திருமணத்தைத் தாண்டிய கள்ளக் காதல் உறவில் இருந்தார்” என்பது தான், இவர் மீதான அந்த குற்றச்சாட்டாக இருந்தது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு, பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர், தங்களது விவாகரத்தை முறைப்படி அறிவித்தனர். இதனால், அவர்களது 27 ஆண்டுக்கால திருமண உறவு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் தான், “விவகாரத்து செய்த மனைவி மெலிண்டாவை, மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக” பில் கேட்ஸ் தற்போது விருப்பம் தெரிவித்து உள்ளார்.
அதன்படி, லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பில்கேட்ஸ் தற்போது அளித்து உள்ள புதிய பேட்டியில், “நான், மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்று, கூறினார்.
அத்துடன், “கடந்த 2 ஆண்டுகள் மிகவும் முக்கியமான காலகட்டமாகி போனது, இதற்கு காரணம் கொரோனா பெருந்தொற்று தான். எனக்கு இது வித்தியாசமான காலமாக இருந்தது. எனக்கு சிலவற்றை உணர்த்திய காலமு இதுதான். குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, ஒவ்வொரு திருமணமும் மாற்றத்தை நோக்கி செல்கிறது. விவாகரத்து ஆனாலும், எங்கள் திருமணம் சிறந்த திருமணம்” என்றும், அவர் தனது மனைவியின் பெருமைகளை புகழ் பாடினார்.
மேலும், “நாங்கள் ஒன்றாக அறக்கட்டளையை உருவாக்கினோம் என்றும், எனது முன்னாள் மனைவியுடன் இன்னும் அறக்கட்டளையில் பணியாற்றுவதை நான் தற்போது வரை அதிர்ஷ்டமாக உணர்கிறேன்” என்றும், அவர் குறிப்பிட்டார்.
“எங்கள் அறக்கட்டளையின் வருடாந்திர ஊழியர் கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது என்றும், மெலிண்டாவும் நானும் ஒன்றாக நடத்தும் வருடாந்திர கூட்டமும் இதுதான்” என்றும், அவர் கூறினார்.
“மெலிண்டாவுடன் இன்னும் நட்புடன் இருப்பதாக நம்புகிறேன் என்றும், அவருடன் எனக்கு மிக முக்கியமான மற்றும் நெருக்கமான அதே சமயம் சிக்கலான உறவு இருந்தது என்றும், இருப்பினும் நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்தோம்” என்றும், அவர் பேசினார்.
குறிப்பாக, “எங்களது திருமணம் ஏன் முதலில் முடிவுக்கு வந்தது என்பதைப் பொறுத்த வரை, திருமணங்கள் மிகவும் சிக்கலானவை என்றும், அதை ஆராய்வது வீணானது என்றும், விவாகரத்தின் தாக்கத்தில் இருந்து இருவரும் மீண்டு வருகிறோம்” என்றும், அவர் சூசகமாக தெரிவித்தார்.
முக்கியமாக, “நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஆனால், நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றும், அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அத்துடன், “எனது எதிர்காலத்தைப் பொறுத்தவரை என்னிடம் எந்த திட்டமும் இல்லை என்றும், ஆனால் நான் திருமணத்தை பரிந்துரைக்கிறேன் என்றுமு், மெலிண்டா கேட்ஸ் மீண்டும் திருமணம் செய்து கொள்வாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றும், பில்கேட்ஸ் மனம் திறந்து வெளிப்படையாகவே பேசினார். தற்போது பில்கேட்ஸ் மனம் திறந்து பேசியது, உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.