ஊரடங்கு குறித்து கூடுதல் தளர்வுகள்: திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி?- மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திறந்த வெளி மற்றும் உள் அரங்கு பொருட்காட்சிகளை அனுமதிப்பது, உணவகங்கள், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது, புத்தக கண்காட்சி ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகரித்து காணப்பட்டது. இதனால், வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, திரையரங்கம், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தீவிர கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியது.
மேலும் இதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தற்போது, தினசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. இதனிடையே, தற்போது அமலில் உள்ள ஊடங்கு கட்டுப்பாடு பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுத்துறை, பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 15ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மழலையர் பள்ளிகள் திறப்பது, திருமணம், பொருட்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் அதிகப்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து திறந்த வெளி மற்றும் உள் அரங்கு பொருட்காட்சிகளை அனுமதிப்பது, உணவகங்கள், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது, புத்தக கண்காட்சி ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.