கோவில்பட்டி அருகே தாயில்லா ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறி பால் கொடுக்கும் நாய் ஒன்றின் அதிசய நிகழ்வை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. கட்டட வேலைகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்து செய்து வரும் இவர், தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற பெண் நாய் ஒன்றை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் கருவுற்று இருந்த கிட்டியம்மாள் என்ற பெண் நாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 குட்டிகளை ஈன்றுள்ளது. பெருமாள்சாமி அந்த 6 நாய் குட்டிகளையும் தனது நண்பர்களுக்கு கொடுத்துவிட்டார்.

dog milk lamb

இதற்கிடையே தென்காசி அருகேயுள்ள மேலப்பாவூரில் உள்ள பெருமாள்சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் வளர்த்த ஆடு ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது. 
அதில் ஒரு குட்டியை தனது தந்தை பெருமாள் சாமியிடம் கொடுத்துள்ளார். 

பெருமாள்சாமி தனது வீட்டில் அந்த ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறார். ஆட்டுக்குட்டியும், கிட்டியம்மாள் என்ற பெண் நாயும் பெருமாள்சாமி வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், ஆட்டுக்குட்டிக்கு பசி எடுத்ததும் கிட்டியம்மாள் என்ற பெண் நாய் பால் கொடுத்ததைப் பார்த்த பெருமாள்சாமி குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். 

தாயில்லாத ஆட்டுக்குட்டியை தனது பிள்ளையாக நினைத்து பால் கொடுத்து வரும் கிட்டியம்மாள் என்ற நாயை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இது குறித்த செய்தி பரவியதும் அப்பகுதியில் உள்ள மக்கள் நாய் ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

நேற்று குரங்கு ஒன்று தொட்டியில் விழுந்து கிடந்த பூனை குட்டியை காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் சேறும், சகதியுமாக உள்ள குப்பை தொட்டியில் பூனை குட்டி ஒன்று விழுந்து தன்னால் எழ முடியாமல் அதன் உள்ளே சிக்கி தவித்துக் கொண்டு இருந்தது. 

dog milk lamb

பூனை குட்டியின் சப்தம் கேட்டு குரங்கு ஒன்று குப்பை தொட்டியை எட்டி பார்க்க உள்ளே பூனைக்குட்டி வெளியில் செல்ல வழி இல்லாமல் செய்வதறியாது உள்ளேயே கிடந்தது.

 பூனைக் குட்டியை காப்பாற்றும் நோக்கில் குரங்கு சகதியான குப்பை தொட்டிக்குள் உடனே இறங்கி தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது.

எனினும் பூனை குட்டியை காப்பாற்ற தன்னால் முடியாது என்பதை அறிந்த குரங்கு குப்பை தொட்டியில் இருந்து வெளியில் வந்து பூனை குட்டியை காப்பாற்ற சிறுமி ஒருவரிடம் உதவி கேட்கின்றது. 

குரங்கின் மொழியை புரிந்து கொண்ட சிறுமி உடனே குப்பை தொட்டியில் இறங்கி பூனை குட்டியை காப்பாற்றி குரங்கின் கைகளில் ஒப்படைக்கிறார்.

உடனே தனது வயிற்றில் அரவணைத்து பூனைக் குட்டியிடம் குரங்கு அன்பு செலுத்துகின்றது. இந்த வீடியோ இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி அனைத்து உயிர்களிடம் அன்பு செலுத்த கற்றுக்கொடுத்துள்ளது.

இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.