இந்திய ராணுவ தளபதியின் நிலை என்ன? விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி? முழு விபரம்..
“இந்திய ராணுவ தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்திய ராணுவ தளபதியின் நிலை என்ன? விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்போது? எப்படி?” என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
ஊட்டியில் உள்ள வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் தான், தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
குறிப்பாக, குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், சுமார் ஒன்றரை மணி நேரமாக தீப்பிடித்து எரிந்திருக்கிறது. சுமார் ஒன்றரை மணிநேர போராட்டத்திற்குப்பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான அந்த போர் விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பெட்ரோல் மூலமாக இயக்கப்படுவதால், கீழே விழுந்து தீ பிடித்தத்தில் ஹெலிகாப்டரில் தீயானது துளியும் அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது.
இதனால், தொடக்கத்தில் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் அருகே சென்று யாராலும் மீட்பு பணி மேற்கொள்ள முடியவில்லை என்றும், கூறப்படுகிறது.
குறிப்பாக, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட மொத்தம் 14 பேர் பயணம் செய்து உள்ளனர்.
மிக முக்கியமாக, இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதி முதலில் 3 பேர் தான் உயிரிழந்தனர் என்றும், பிறகு 4 பேர் என்றும், அதன் பிறகு 6 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கயைானது 7 ஆக உயர்ந்திருக்கிறது.
அதாவது, ஏற்கனவே 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 ராணுவ அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிக முக்கியமாக, குன்னூரில் விபத்துக்குள்ளான மிக்-17வி5 ரக ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்திருந்த நிலையில், பிபின் ராவத் நிலை குறித்து முழுமையான மற்றும் உறுதியான தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், அவர் 80 சதவீதம் அளவுக்கு தீகாயம் அடைந்திருப்பதாக மட்டுமே கூறப்படுகிறது. ஆனால், அவரது மனைவி மதுலிக்கா ராவத் இந்த விபத்தில் உயிரிழந்ததாகவும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான், ஹெலிகாப்டர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, கோவையில் இருந்து 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குன்னூருக்கு விரைந்து சென்றிருக்கிறது. அதில், தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நிபுணர்கள், குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ராணுவம் விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், “கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு உள்ளதாக” முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து, மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இந்த அவச ஆலோசனை கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார்.
அத்துடன், இந்த விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தான், குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து செல்கிறார்.
முக்கியமாக, கோவையில் இருந்து சூலூர் வந்தவர்கள் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் எல்.எஸ்.லிட்டர் ஹர்ஜிந்தர் சிங், பாதுகாவலர்கள் குர்சேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, சத்பால் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.