சகோதரனின் பிறந்தநாளில் பிளாஷ்பேக்கை நினைவுபடுத்திய விஷ்ணு விஷால் !
By Sakthi Priyan | Galatta | April 01, 2020 19:16 PM IST
தமிழ் திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு காடன், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களால் விருந்தளிக்கவுள்ளார் விஷ்ணு.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அவரது தம்பியின் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அப்பதிவில் பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி ருத்ரா. இன்று ஏப்ரல் 1, ருத்ரா சிறுவனாக இருக்கும் போது அவனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவனது நண்பர்களை கூப்பிடுவோம். ஆனால் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் தங்களை முட்டாளாக்க முயற்சிப்பதாக நினைத்து வீட்டிற்கு வரமாட்டார்கள். பின்னர் அவர்களிடம் ஃபோன் செய்து உண்மையை எடுத்துச்சொல்லி புரிய வைப்போம் என்று பதிவு செய்துள்ளார்.
Prasanna expresses his interest to work with Thalapathy Vijay and Thala Ajith!
01/04/2020 08:00 PM
Prasanna talks about Vishal turning director for Thupparivaalan 2! Check out!
01/04/2020 06:45 PM
Taapsee Pannu reveals the meaning of her Pink movie tattoo
01/04/2020 06:42 PM
Vineeth Sreenivasan's Hridayam is said to be a memoir of his own love story!
01/04/2020 05:04 PM