நண்பர்களுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த தளபதி விஜய் !
By Aravind Selvam | Galatta | August 02, 2020 17:54 PM IST
பிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத்,மாஸ்டர் மஹேந்திரன்,பிரிகிடா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல்கள் ஓயாது ஒளித்து வருகின்றன.இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லாக்டவுன் நேரத்தில் தளபதி விஜயின் புகைப்படங்கள் எதுவும் வெளிவராமல் இருந்தது.லாக்டவுன் தொடங்கிய நேரத்தில் மாஸ்டர் படக்குழுவினருடன் வீடியோகாலில் தளபதி விஜய் பேசிய புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகின்றன.இந்நிலையில் சில மாதங்கள் கழித்து தளபதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் வீடியோகாலில் பேசி மகிழ்ந்துள்ளார்.இந்த புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்
சற்றுமுன்
தளபதி விஜய் அண்ணா அவர்கள்
தன்னுடைய நண்பர்களுடன்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்ளும் போது... pic.twitter.com/Nyi00HZYlI— Dr.ECR.P.Saravanan (@Dr_Ecr_official) August 2, 2020
Thalapathy Vijay's recent video call footage goes viral
02/08/2020 05:39 PM
Amitabh Bachchan discharged from hospital after testing negative for Covid-19
02/08/2020 05:16 PM