அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
By | Galatta | November 05, 2020 19:53 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று கடந்த சில வருடங்களாக பலரும் தெரிவித்து வந்தனர்.விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி பல உதவிகளை ரசிகர்கள் மூலம் செய்து வருகிறார் விஜய்.இன்று அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும்,விஜய் அரசியலில் களமிறங்கிறார் என்று பரபரப்பு கிளம்பியது.இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து மறுப்புகள் வந்த வண்ணம் இருந்தது.இந்நிலையில் தற்போது இது குறித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளா்ா என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன்.
Official statement from #ThalapathyVijay's Side!!!#Thalapathy @actorvijay @BussyAnand @Jagadishbliss @V4umedia_ pic.twitter.com/z7hz7ywpin
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 5, 2020
Press Release In English https://t.co/fQJlLWUaTY pic.twitter.com/zoFZOHv5LW
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 5, 2020
For those wanting the statement in the letterhead format, here's the official one! https://t.co/Q2ChPI3c8H pic.twitter.com/JiAWAZOfzy
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 5, 2020
Thalapathy Vijay's Political Entry - first official breaking statement!
05/11/2020 05:46 PM
WOW: Super exciting announcement on Kamal Haasan 232 | Lokesh Kanagaraj
05/11/2020 05:19 PM
Popular Tamil film personality trolls Suchi for her Bigg Boss decisions!
05/11/2020 04:48 PM