உங்கள் சாதனைகள் என்றுமே ஈடு செய்ய முடியாதவை SPB மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் !
By Aravind Selvam | Galatta | September 26, 2020 13:12 PM IST
இந்தியாவின் முன்னணி பாடகர்களில் மிகப்பெரும் ஜாம்பவானாக , கிட்டத்தட்ட 50 ஆண்டுகளளாக இருந்து வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.தனது காந்தக்குரலால் பல இதயங்களை மயக்கும் மகிமை கொண்டவர்.15 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். மேலும் 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா போன்றவர்கள் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத்,இமான் என்று தற்போதைய ஜெனரேஷன் இசையமைப்பாளர்கள் வரை அனைவருடனும் பணியாற்றியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் எஸ்.பி.பி,சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால் நேற்று திடிரென்று இவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் எஸ்.பி.பி காலமானார் என்ற செய்தி கேள்விப்பட்டு பல ரசிகர்கள்,பிரபலங்கள் என்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.எஸ்.பி.பி குறித்த தங்கள் நினைவுகளையும்,இரங்கல்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.SPB-யின் பண்ணைவீட்டில் அவரது இறுதி சடங்குகள் அரசு மரியாதையோடு நடைபெற்று வருகிறது.
இவரது மறைவு குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவு செய்துள்ளார் அதில் உங்களின் சாதனைகள் என்றுமே ஈடு செய்ய முடியாதது என தெரிவித்துள்ளார்.மேலும் உங்களுடைய நினைவுகள் என்றுமே அழியாதவை என்றும் அவருடைய ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Feel a hole in my heart! It's like loosing a lifetime of happy moments! SPB Sir you’re Eternal.. Your achievements are irreplaceable! Thank you for showing us, what humility means. Will always treasure your work for life! Prayers and Peace...🙏🏽 #RIPSPBSir
— Suriya Sivakumar (@Suriya_offl) September 25, 2020
Kodi and Pattas fame director Durai Senthilkumar's father passes away
26/09/2020 01:36 PM
If you liked music that crossed boundaries... - Vikram's condolences to SPB
26/09/2020 10:27 AM