உதவிக்கரம் நீட்டிய சன் பவுண்டேஷன்!!-மகிழ்ச்சியில் சின்னத்திரை கலைஞர்கள்!!
By Anand S | Galatta | June 01, 2021 11:35 AM IST
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் சின்னத்துறை படப்பிடிப்புகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான திரைப்பட பணியாளர்கள் சின்னத்திரை கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான சூழலை சமாளிக்க பலரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளையும் நிவாரண உதவிகளையும் செய்து வரும் நிலையில் சன் குழுமம் முன்னதாக முப்பது கோடி ரூபாய் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படுமென அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் அவர்கள் 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மேலும் சன் டிடிஎச் குழுமத்தின் சார்பில் 50 செறிவூட்டிகள் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சரிடம் நேரடியாக கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இருக்கும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சின்னத்திரை கலைஞர்களுக்கு மீண்டும் சன் பவுண்டேஷன் குழுமம் சார்பில் நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ள சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் 2 ஆயிரம் பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மளிகைப் பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொருட்களை திருமதி.காவேரி கலாநிதி மாறன் அவர்கள் வழங்கியுள்ளார்.
ற்கனவே பேரிடர் மேலாண்மைக்கு நிதி உதவி செய்த சன் குழுமம்,ஆக்சிஜன் செறிவூட்டிகள் தொடர்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதி என உதவிக்கரம் நீட்டி வந்த சன் குழுமம் தற்போது சின்னத்திரை கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் சன் குழுமத்தை மக்கள் அனைவரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.
Sun foundation , sun network , suntv, sun pictures , kalanithimaran , kavery kalanithimaran