சிவகார்த்திகேயன் படம் நிகழ்த்திய கலக்கல் சாதனை ! வீடியோ உள்ளே
By Aravind Selvam | Galatta | July 24, 2020 16:52 PM IST
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனவால் பாதிக்கப்பட்டுளள்து.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 இறுதியில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் கனா.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார்.இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பல பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வந்தனர்.வசூல் ரீதியாகவும்,விமர்சகர்களிடமும் இந்த நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது மகள் ஆராதனாவும் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி அசத்தியிருப்பார்.அப்பா மகள் இருவரும் இணைந்து பாடிய இந்த பாடல் யூடியூப்பில் செம வைரல் ஆனது.குறிப்பாக ஆராதனாவின் மழலை மாறாத குரல் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.குழந்தைகளும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு வந்தனர்.
இந்த பாடல் சமீபத்தில் 1 மில்லியன் லைக்களை பெற்று சாதனை படைத்திருந்தது.இதனை தொடர்ந்து இந்த பாடல் நேற்று 175 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தில் அனிருத் பாடிய ஒத்தையடி பாதையில வீடியோ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.இதன் மூலம் தமிழில் 2 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் படம் என்ற பெருமையை கனா படைத்துள்ளது.மேலும் அனைத்து பாடல் தளங்களிலும் 500 மில்லியன் ரசிகர்கள் இந்த படத்தின் பாடல்களை ஸ்ட்ரீம் செய்துள்ளனர் என்ற சாதனையையும் இந்த படம் படைத்துள்ளது.இவற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Proud and elated to share u tat #Kanaa is the first ever album in Tamil to hv two songs wit 100 Million+ views 💥🔥👍here is a small video of gratitude 🙏👍🤗#AstonishingTwo100MSongsForKanaa#Massive500MStreamsForKanaa pic.twitter.com/pZ1sSuu50C
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 24, 2020
Our #Kanaa is the first ever Tamil film album to have two songs with 100M+ views. We thank our music director @dhibuofficial for this superhit album💐😇#AstonishingTwo100MSongsForKanaa@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @Arunrajakamaraj | #Sathyaraj | @aishu_dil | @Darshan_Offl pic.twitter.com/paXWvW8A9D
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 24, 2020
500M was a distant dream for us which has now turned into reality. Yeah... It's 500M+ streams for our #Kanaa album 🤩 Thank you all for the overwhelming response for our album 🙏
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 24, 2020
🎶 @dhibuofficial#Massive500MStreamsForKanaa@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @Arunrajakamaraj pic.twitter.com/H1IBX1vv2S
Suriya's wedding song video from Soorarai Pottru
24/07/2020 04:10 PM
This young sensational heroine onboard for Vijay Antony's next!
24/07/2020 03:15 PM
Latest official update on Dhanush's Jagame Thandhiram - Get Ready!
24/07/2020 12:36 PM
Avatar 2's new release date | James Cameron
24/07/2020 11:35 AM