இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிவாஜி புகழ் அங்கவை சங்கவை !
By Sakthi Priyan | Galatta | September 29, 2020 17:23 PM IST
பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த திரைப்படம் சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ஸ்ரேயா, விவேக், சுமன், மணிவண்ணன் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார்.
நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வண்ணம் இப்படத்தின் கதை பேசப்பட்டிருக்கும். மிகவும் சீரியஸான கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் காதல், காமெடி காட்சிகளும் ஏராளம். அதில் ஒரு காமெடி காட்சியில் சாலமன் பாப்பைய்யாவின் மகள்களாக கருப்பு நிறத்தில் இருக்கும் அங்கவை, சங்கவை என்ற பெண்கள் நடித்திருந்தார்கள். திரையில் கருப்பாக காண்பிக்கப்பட்டதால் அவர்களை கிண்டலடித்தனர் ரசிகர்கள்.
ஆனால் அவர்கள் நிஜத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் நீங்களே அசந்துவிடுவீர்கள். அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்திற்காக மேக்கப் போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றனர். சிவாஜி படத்திற்கு பிறகு எந்திரன், 2.0 ஆகிய படங்களை சூப்பர்ஸ்டார் வைத்து இயக்கிவிட்டார் ஷங்கர். தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.
விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர். சில நாட்கள் முன்பு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவி உலகையே வாட்டி வதைக்கிறது.
கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாகச் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார். இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
சமீபத்தில் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kajal Aggarwal's Paris Paris - New Video Song released | Check Out
29/09/2020 06:00 PM
STR's pre-COVID photo shoot video with celebrity photographer Karthik Srinivasan
29/09/2020 05:37 PM
New Fun Video Song from Ka Pae Ranasingam | Vijay Sethupathi | Aishwarya Rajesh
29/09/2020 05:24 PM