இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் ! திவ்யா சத்யராஜ் கோரிக்கை
By Sakthi Priyan | Galatta | April 08, 2020 18:11 PM IST
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியூட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். தந்தை சத்யராஜ் போலவே சமூக அக்கறை அதிகம் கொண்ட திவ்யா, மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர்களில் ஒருவர். தற்போது தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாங்க பள்ளிகளில் தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் 40 சதவீத பெண்களுக்கும், 38 சதவீத ஆண் பிள்ளைகளுக்கும் இரும்புச்சத்து குறைவாக இருந்ததை கண்டறிந்ததாக கூறியுள்ளார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் பிள்ளைகளுக்கு இரும்பு சத்து குறைந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
எனவே அரசாங்கம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். காரணம் இரும்புச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதன் மூலம் கொரோனா வர வாய்ப்பு அதிகம் என்பதால் அரசுக்கு இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
Mohanlal donates 50 lakhs to Kerala CM Relief Fund to fight Corona!
08/04/2020 06:00 PM
Reports say Mumbai has reached Stage 3: Community Transmission
08/04/2020 05:03 PM
Vishnu Vishal's FIR editing work on progress during quarantine - latest update!
08/04/2020 05:00 PM