நெற்றிக்கண் ரீமேக் விவகாரம் ! கவிதாலயா நிறுவனத்தின் விளக்கம் இதோ
By Aravind Selvam | Galatta | February 18, 2020 16:34 PM IST
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்த திரைப்படம் நெற்றிக்கண்.தனுஷ் இந்த படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறார் என்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.இந்த படத்தின் கதாசிரியராக விசு பணியாற்றியிருந்தார்.
சமீபத்தில் இதுகுறித்து பேசிய விசு இந்த படத்தை ரீமேக் செய்யும் திட்டம் வைத்திருந்தால் தன்னிடமும் உரிமம் பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் தயாரிப்பாளர்களான கவிதாலயா நிறுவனம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில் திரைப்படத்தயாரிப்புத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம்.தமிழ் திரையுலக ஜாம்பவான் கே பாலச்சந்தர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக்காப்புரிமை குறித்து மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஒருபோதும் இந்நிறுவனம் விதிமீறல்களுக்கு எந்த விதத்திலும் இடம் அளித்ததில்லை. மேலும், கவிதாலயா எழுத்தாளர்களின் பங்கையும், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பதால், அவர்களை மிகுந்த மரியாதையுடனேயே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது.இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம்.அது குறித்து தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில்,
கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களை அணுகவும் இல்லை. நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் திரு. விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. அவ்வாறு, ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். செயல்பட்டும் வந்திருக்கிறது.
மேலும், திரு. விசு அவர்கள் கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும்,முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்தமீறல்களுக்கும் விதிமீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை இதன் மூலம் வலியுறுத்திக் கூறுவதோடு அனைத்து தரப்பினருக்கும் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
Taapsee announced for Run Lola Run remake titled Looop Lapeta
18/02/2020 03:41 PM
WATCH: Kiara Advani's New Movie Trailer Is Out!
18/02/2020 03:30 PM
Young singer Sushmitha Raje commits suicide over alleged dowry harassment!
18/02/2020 03:05 PM