நான் சிரித்தால் பட உரிமையை கைப்பற்றிய ஜீ தமிழ் !
By Aravind Selvam | Galatta | February 11, 2020 19:10 PM IST
இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கியுள்ளார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்
இந்த படத்தினையும் இயக்குனர் சுந்தர் சி தயாரித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹிப்பாப் தமிழா ஆதி நடிப்பில் காதலர் தினத்தன்று வெளிவரவிருக்கும் 'நான் சிரித்தால்' படத்தின் Satelite உரிமையை ஜீ தமிழும் டிஜிட்டல் உரிமையை ஜீ5-ம் பெற்றுள்ளது!🤩👌#NaanSirithal #SateliteRights #DigitalRights #ZeeTamil #Zee5 @Rockfortent pic.twitter.com/xJIawvvWCX
— Zee Tamil (@ZeeTamil) February 11, 2020
Thappad - Trailer 2 | Taapsee Pannu | Anubhav Sinha | Bhushan Kumar
11/02/2020 06:46 PM
Prabhu Deva - Adhik Ravichandran film's first look to release on Feb 14!
11/02/2020 06:32 PM
Uyire - Musical Video | Vishaal, Vishwa | Bommu Lakshmi, Balaji Murugadoss
11/02/2020 06:08 PM
Anasuya Bharadwaj lodges complaint against Twitter bully!
11/02/2020 06:07 PM