வியட்நாமீஸ் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் !
By Sakthi Priyan | Galatta | December 21, 2020 17:29 PM IST
தனித்தன்மைமிக்க இசையால் திரையுலக ரசிகர்களை ஈர்த்தவர் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். அவரது இசையில், திரைப்படத்தின் பின்னணியில் ஒலிக்கும் பிஜிஎம் மொழிகடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்துள்ளது. 2017-ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா, கடந்த ஆண்டு வெளியான கைதி போன்ற படங்கள் இவரை BGM ஸ்பெஷலிஸ்ட் ஆக்கியது.
இசையமைப்பாளர் சாம் CS, அவரது இசையில், பெரிய பட்ஜெட் படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் தற்போது உலக திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சண்டைப்பயிற்சி இயக்குனர் பீட்டர் ஹெய்ன் இயக்கும் வியட்நாமிஸ் படமான சாம் ஹொய் ( Sam Hoi ) படத்திற்கு இசையமைக்கிறார் சாம் CS. இது குறித்து இசையமைப்பாளர் சாம் CS கூறியதாவது...மிக மகிழ்ச்சியாகவும் அதே நேரம் கொஞ்சம் பதட்டமாகவும் உள்ளது. தமிழில் கிடைத்த அதே வரவேற்பு உலக ரசிகர்களிடம் இருந்தும் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன்.
உலக திரைப்படத்திற்கு இசையமைக்கும் இந்த அரிய வாய்ப்பு, சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் மூலம் தான் கிடைத்தது. இப்படத்தை அவர் தான் இயக்குகிறார். என் மேல் அவர் வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைக்கு, நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உலகப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக, மேஜிக்கல் தருணமாக இருந்தது. படத்தில் தூள் பறக்கும் ஆக்சன் காட்சிகள் பாக்ஸிங் வளையத்திற்குள் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
எமோஷனல் காட்சிகளும் இப்படத்தில் உண்டு. அவை எனது திறமையை வெளிக்கொண்டு வர நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இப்படம் வெளிவரும் முன்பே, வேறு பல உலகப்பட வாய்ப்புகளும், கொரியன் பட வாய்ப்புகளும் என்னை தேடி வந்துள்ளது, மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தற்போது சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம், ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரைசா நடிக்கும் தி சேஸ் படத்தின் பின்னணி இசை பணிகளின் இறுதி கட்டத்தில் உள்ளார் படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மாதவன் நடித்த ராக்கெட்ரி படத்தின் இசை பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது. உலக திரைப்படத்தில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அவர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.
Master director Lokesh Kanagaraj's latest statement goes viral - check out!
21/12/2020 05:32 PM
Sufiyum Sujatayum director Naranipuzha Shanavas In ICU after a cardiogenic shock
21/12/2020 04:47 PM
Madhavan as a KING - Maddy shares a glimpse from his dropped film!
21/12/2020 04:33 PM