மாஸ்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கூறிய ருசிகர தகவல் !
By Sakthi Priyan | Galatta | July 09, 2020 18:55 PM IST
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தாய் இயக்கியுள்ளார். அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷன் வெளியானது.
ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை. அதனால் விஜய் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துடன் தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, மக்களின் அபிமானம் பெற்ற பிரபல நாளிதழுக்கு படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருக்கிறார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் பிரச்சனையை பொறுத்தே படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அது பொங்கலுக்கா அல்லது தீபாவளிக்கா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்காகதான் படக்குழு காத்திருக்கிறது என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார். லாக்டவுனில் பல திரைப்படங்கள் ஓடிடி-ல் வெளியாவதை பார்க்க முடிகிறது. இந்த தருணத்தில் சேவியர் பிரிட்டோ கூறிய இச்செய்தி இனிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.
மாஸ்டே படத்தின் ஆடியோ லான்ச்சில் சேவியர் பிரிட்டோ பேசியதை யாராலும் மறக்கமுடியாது. சிறந்த தொழிலதிபரான இவர், தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி மேடையில் பேசி அரங்கையே அதிர வைத்தார். தளபதியின் நாளைய தீர்ப்பு படத்தின் போதே, அவர் வருங்காலத்தில் பெரிய ஆளாக வருவார் என்று கணித்தவர் பிரிட்டோ.
Mysskin's film runs into legal trouble | Breaking statement from Producer
09/07/2020 06:55 PM
''I could harm myself out of depression and frustration'' - Vanitha
09/07/2020 06:24 PM
Rajinikanth's first video statement in lockdown | Kamal Haasan | K Balachander
09/07/2020 05:19 PM
Glimpse of Dil Bechara title track | Sushant Singh Rajput | AR Rahman
09/07/2020 01:53 PM