அடேங்கப்பா.. ஆபாச வீடியோவில் சிக்கிய 4 ஆயிரம் அரசியல்வாதிகளும்.. அதிகாரிகளும்..!
By Arul Valan Arasu | Galatta | September 26, 2019 16:00 PM IST
பாலியல் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் 4 ஆயிரம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வீடியோவில் சிக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள முக்கியமான அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களைக் குறிவைத்து ஒரு பாலியல் கும்பல், மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, 5 பேர் கொண்ட இளம் பெண்கள், தங்களுக்கு உதவி தேவைப்படுவதாக அரசியல்வாதிகளிடமோ அல்லது அரசு உயர் அதிகாரிகளிடமோ தனித் தனியாகச் சென்று உதவி கேட்பதுபோல் அறிமுகம் ஆவார்கள். அந்த உதவி கிடைக்கப் பெற்றதும், குறிப்பிட்ட பிரமுகர்களுக்கு போன் செய்து நன்றி கூறுவதுபோல் பேசி, உதவிக்குக் கைமாறாக என்ன வேண்டும் என்று அவர்கள் கேட்பார்களாம்.
மேலும், “என்ன வேண்டுமானாலும்... தர ரெடி” என்றும் அவர்கள் டபுள் மீனிங்கில் பேச தொடங்குவார்கள். அதனைத் தொடர்ந்து, அந்த அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தங்களது ஆசை வார்த்தையில் விழ வைத்து, தங்கள் அழைக்கும் இடத்திற்குத் தனிமையில் வர வைத்துள்ளனர். அங்கு, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, அதை அவர்களுக்கேத் தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டுள்ளனர்.
பின்பு, சில நாட்கள் கடந்த நிலையில், குறிப்பிட்ட பிரமுகர்களுக்கு அந்த பெண்கள் போன் செய்து லட்சக் கணக்கில் பணம் கேட்டு மிராட்டி, அதைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அப்படி, ஒரு அரசு பொறியாளர் ஒருவர், இந்த பாலியல் கும்பலின் ஆபாசப் படத்தில் சிக்கி, அவர்களது மிரட்டலுக்கு அஞ்சாமல், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த பாலியல் மோசடி கும்பலைச் சுற்றி வளைத்து 5 பெண்கள், ஒரு ஆண் உட்பட மொத்தம் 6 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து மொத்தம் 4 ஆயிரம் ஆபாச வீடிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த 4 ஆயிரம் ஆபாச வீடியோவிலும் மத்தியப் பிரதேசத்தின் பாஜக - காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சிக்கி உள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய கம்யூட்டரில் டெலிட் செய்யப்பட்ட வீடியோக்கள் மட்டும் ஆயிரம் இருக்கும் என்றும், அதனையும் சேர்த்தால் மொத்தம் 5 ஆயிரம் வீடியோக்கள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 5 ஆயிரம் முக்கிய பிரமுகர்களை ஏமாற்றி, பாலியல் மோடியில் ஈடுபட்டு இதுவரை பல கோடி ரூபாய் பணம் பறித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, தற்போது பாலியல் கும்பலிடமிருந்து கிடைத்துள்ள இந்த 5 ஆயிரம் ஆபாச வீடியோவும் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்வது போலீசாருக்கு பெரும் சவலாக இருப்பதாக மத்தியப் பிரதேச மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.