பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், தனது தந்தையின் வருகை போது தான் சந்தித்த பிரச்சனை குறித்து பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் லாஸ்லியா. பல நாட்கள் கழித்து பார்க்கவரும் தந்தை, தன்னை அரவணைப்பார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் இப்படி செய்யலாமா ? என்று கேட்டது வேதனையாக இருந்தது.

losliya

losliya

பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் பல டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முகென் நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.

sandy

biggboss

sherin

லாஸ்லியாவின் குடும்பத்தில் இருந்து அவரது தந்தை, தாய் மற்றும் தங்கைகள் வருகையின் போது மிக சோகமான நிலையில் காணப்பட்டார் லாஸ்லியா. கவினுடன் லாஸ்லியா பேசி பழகுவதை ஊர் தவறாக பேசுகிறது என்ற நியாயமான குற்றச்சாட்டை வைத்தார் லாஸ்லியாவின் தந்தை. இதுபோன்ற துயர சம்பவங்களை மறந்து இறுதி போட்டியில் லாஸ்லியா இருப்பது அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.