கோவிட் தொற்றால் காலமான பிரபல கன்னட தயாரிப்பாளர் !
By Sakthi Priyan | Galatta | April 27, 2021 11:50 AM IST
கன்னட சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ராமு. இவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை என அழைக்கப்படும் நடிகை மாலஸ்ரீயின் கணவர் ஆவார். ஏகே 47, லாக்அப் டெத், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார் ராமு. கடந்த 2019-ஆம் ஆண்டு, தமிழில் வெளியான 96 திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான 99 திரைப்படத்தை ராமு தயாரித்திருந்தார்.
ராமு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை ராமு கொரோனாவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 52.
இது குறித்துப் பேசிய கன்னட திரைப்பட அகாடமி தலைவரும், ராமுவின் குடும்ப நண்பருமான சுனில் புரானிக், மிகவும் அரிய வகை தயாரிப்பாளர்களில் ஒருவர். தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றதோடு அவரது பெயரை வைத்தே படங்கள் ஓடும் அளவும் பெயர் பெற்றிருந்தார். ஒரு நாயகன், இயக்குனர், இசையமைப்பாளர் பெயரை விட இவரது பெயரை வைத்து ஓடிய படங்கள் அதிகம். அதுவே ரசிகர்களை ஈர்த்தது. படத்துக்காக பிரம்மாண்ட செலவு செய்யத் துணிந்தவர். இதற்காகத்தான் அவருக்கு கோடி ராமு என்ற பெயரும் கிடைத்தது என்று கூறினார்.
90-களில் கன்னடத் திரைப்படங்களுக்கு சிறிய சந்தை இருந்த சமயத்திலேயே ஒரு கோடி வரை திரைப்படங்களுக்காகச் செலவழித்தவர் ராமு. முதலில் விநியோகஸ்தராக இருந்த ராமு பின்னர் தயாரிப்பாளராக மாறினார். ராமு எண்டர்ப்ரைஸ் என்கிற பெயரில் 30க்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்தார்.
துறையில் தனெக்கன ஒரு பெயரை சம்பாதித்த ராமு, அப்போது பிரபலமாக இருந்த நடிகை மாலாஸ்ரீயை மணந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ராமு தயாரித்த பல படங்களில் மாலாஸ்ரீ நடித்துள்ளார்.
கொரோனா எனும் கொடூரத்தில் தவிக்கும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு கலாட்டா குழுமம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். முகக் கவசம்...நம் உயிர் கவசம் !!!
Heartfelt condolences to actor Arun Vijay and family!
27/04/2021 11:23 AM
SAD: Popular Tamil director Thamira passes away due to Covid-19 complications!
27/04/2021 10:00 AM