கேரளத்தின் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகிலுள்ள குன்னி சேரியை பூர்வீகமாகக் கொண்டவர் ராமன்மணி. சிறுவயதில் இருந்தே நடிப்பு, இசை, மிமிக்ரி ஆகியவற் றில் அவருக்கு கொள்ளைப் ப்ரியம். ஆனால், கருப்பான உருவத் தோற்றம் அவரது மேடைக் கனவை சிதைத்தது. அதையெல் லாம் உடைத்து, கலாபவன் கூத்துப்பட்டறை அமைப்பு அவருக்கான வாசலைத் திறந்துவைக்க, தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் கலாபவன் மணியாக அவர் கோலோச்சினார்.

ஆனால், ஒரே இரவில் அந்த வளர்ச்சி கைகூடிவிடவில்லை. இதில் கலாபவன் மணி கடந்து வந்த வலிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. கலாபவன் மணியின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘சாலாக்குடிகாரன் சங் காதி’ என மலையாளத்தில் கடந்த ஆண்டு திரைப்படமே வெளி யானது.

ஆட்டோ ஓட்டுனராக தனது வாழ்வைத் தொடங்கிய கலாபவன் மணி, 1995-ல் வெளியான அக்ஷரம் என்னும் மலையாளப் படத்தில் ஆட்டோ ஓட்டுனராகவே அறிமுகம் ஆனார். மலையாளத்தில் நாயக னாக பல படங்களில் நடித்திருந் தாலும், குணச்சித்திர பாத்திரத்தில் தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பை செய்திருக்கிறார். ஜெமினி திரைப்படத்தில் சியான் விக்ரமிற்கு வில்லனாக தேஜா என்ற பாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. 

பின்னர் வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். தமிழில் தளபதி விஜய்யின் புதிய கீதை, குத்து, வேல் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடனான மதுவிருந்தில் கலந்துகொண்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து எர்ணாகுளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடலில் விஷம் கலந்திருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மனைவி மற்றும் உறவினர்கள் புகார் கூறினர். இதுபற்றிய விசாரணை நடந்துவந்தது. பின்னர் மதுபழக்கம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக சிபிஐ அறிவித்தது. 

மறைந்த கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன். இவர் நடனக் கலைஞர். குறிப்பாக இவர் மோகினியாட்டம் ஆடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சூரில் உள்ள சங்கீத நாடக அகாடமியில் ஆன்லைன் மூலம், மோகினியாட்டம் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டிருந்தார். அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து அவர் சங்கீத நாடக அகாடமி முன் போராட்டம் நடத்தினார். 

இந்நிலையில், ராமகிருஷ்ணன் நேற்று இரவு தனது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சாலக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்செய்தி திரை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.