செம ரகளையான காத்துவாக்குல ரெண்டு காதல் பட டூ டூ டூ பாடல் !
By Aravind Selvam | Galatta | September 18, 2021 20:24 PM IST
STR நடித்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் விக்னேஷ் சிவன்.இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடி தான் படம் வெளியாகி இவரை வெற்றிப்பட இயக்குனர்கள் வரிசையில் அமர்த்தியது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
நானும் ரௌடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அனிருத்துடன் தொடர்ந்து வேலைபார்க்க தொடங்கினார் விக்னேஷ் சிவன்.இதனை தொடர்ந்து இவர் சூர்யா இயக்கத்தில் உருவான தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்த இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்தார்.இந்த படமும் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமு
இவற்றை தவிர பல படங்களில் படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் விக்னேஷ் சிவன்.இவர் அடுத்ததாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கி வருகிறார்.தனது நானும் ரௌடி தான் ஹிட் ஜோடி விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன்,சமந்தாவையும் இணைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.இந்த படத்தினை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் இரண்டாவது பாடலான டூ டூ டூ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது செம ரகளையான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலின் மியூசிக் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்