இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் படப்பிடிப்பு தகவல் !
By Sakthi Priyan | Galatta | January 20, 2020 14:00 PM IST
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. அடல்ட் காமெடி ஹாரர் பாணியில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தன.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். மேலும் இவரே படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். ஹீரோயின்களாக கரிஷ்மா, அக்ரித்தி சிங் மற்றும் மீனாள் நடித்து வருகின்றனர்.
இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷாமு ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நாளை முதல் துவங்கவுள்ளதாக தகவல் தெரியவந்தது. இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.