அசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின் !
By Aravind Selvam | Galatta | October 17, 2019 15:05 PM IST
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன்.பொல்லாதவன்,ஆடுகளம்,வடசென்னை படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது
மஞ்சு வாரியர்,பசுபதி,ஆடுகளம் நரேன்,கென் கருணாஸ்,டீஜே,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.
நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இந்த படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது வெறும் படமல்ல பாடம் நில அபகரிப்பு, சாதி வன்மம் போன்ற சமூகப்பிரச்னைகளை கேள்விகேட்கும் துணிச்சல்காரன்.வெற்றிமாறனுக்கும்,தனுஷுக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
#Asuran - படம் மட்டுமல்ல பாடம்!
— M.K.Stalin (@mkstalin) October 17, 2019
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV
காலம் ஒதுக்கி
அசுரனைப் பார்த்ததற்கும்
பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.
பெருமகிழ்ச்சி அடைகிறோம். https://t.co/bvwtkcGWTk— Dhanush (@dhanushkraja) October 17, 2019