பட்டாஸ் படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் !
By Aravind Selvam | Galatta | December 30, 2019 17:05 PM IST
அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படம் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை A&P குரூப்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
We are happy to associate with @sathyajyothi_ for #Pattas 💥 overseas distribution @dhanushkraja @durairsk @omdop @actress_Sneha @Mehreenpirzada @iamviveksiva @MervinJSolomon @Naveenc212 @dhilipaction @Gdurairaj10 @PrakashMabbu @AlwaysJani @LahariMusic @kav_pandian pic.twitter.com/ItXRGLCrCQ
— A&P groups (@AandPgroups) December 29, 2019