மகேஷ்பாபு-தமன்னாவின் பார்ட்டி பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | December 30, 2019 17:37 PM IST
மஹரிஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்தை Fun and Frustration படத்தை இயக்கிய Anil Ravipudi இயக்குகிறார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜெகபதி பாபு மற்றும் விஜயசாந்தி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்திற்கு Sarileru Neekevvaru என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படம் வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் டங் டங் என்ற பார்ட்டி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.