சிவா-யோகிபாபு படத்தில் மேலும் ஒரு குக் வித் கோமாளி பிரபலம்!!
By Anand S | Galatta | July 26, 2021 13:03 PM IST
தமிழ்சினிமாவில் 1970களில் வெளியாகி மெகா ஹிட்டான நகைச்சுவை திரைப்படம் காசேதான் கடவுளடா. இயக்குனர் சித்ராலயா கோபுவின் சூப்பர் ஹிட் மேடைநாடகமான காசேதான் கடவுளடா பின்னர் திரைப்படமானது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரான காசேதான் கடவுளடா திரைப்படத்தை இயக்குனர் சித்ராலயா கோபுவே எழுதி இயக்கியிருந்தார்.
தற்போது காசேதான் கடவுளடா திரைப்படம் ரீமேக் ஆகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் தயாராகும் காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தை இயக்குனர் கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் தயாரிப்பாளர் M.K.ராம் பிரசாத் அவர்களின் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் சிவா மற்றும் நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் காசேதான் கடவுளடா ரீமேக்கில் நடிகைகள் ஊர்வசி & ப்ரியா ஆனந்த் மற்றும் நடிகர்கள் கருணாகரன் & தலைவாசல் விஜய் ஆகியோருடன் இணைந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தில் மேலும் ஒரு குக்கு வித்து கோமாளி பிரபலம் இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த புகழ் காசேதான் கடவுளடா ரீமேக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் கண்ணனின் மசாலா பிக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட காசேதான் கடவுளடா படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில் குக் வித் கோமாளி புகழ் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தொடர்ந்து தல அஜித் குமாரின் வலிமை, நடிகர் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pugazh Joins the sets of #KasethanKadavulada
— MasalaPix (@MasalaPix) July 26, 2021
Produced & Directed by @Dir_kannanR @actorshiva @iYogiBabu @PriyaAnand #karunakaran #Oorvasi @sivaangi_k @VijaytvpugazhO @balasubramaniem #ThalaivasalVijay @MasalaPix @mkrpproductions #MKRamPrasad @DoneChannel1 @digitallynow pic.twitter.com/g4JI2OisMV