உலக அளவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பிரதர் ரியாலிட்டி நிகழ்ச்சி இந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஏழு இந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.

இந்திய திரையுலகின் மிகப்பெரிய ஆளுமையான உலக நாயகன் கமல்ஹாசன் முதல்முறையாக சின்னத்திரையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்த நான்கு வருடங்களில் இதுவரை 4 சீசன்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4-ல் பிரபல தமிழ் நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்றார்.

இதில் இரண்டாம் இடம் பிடித்த பாலாஜி முருகதாஸ் தற்போது தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் பாலாஜி முருகதாசை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் பல முன்னணி பிரபலங்களும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம்

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்த பாலாஜி முருகதாஸிடம் ரசிகர் ஒருவர் “திருமணம் குறித்த திட்டம் என்ன?” என்று கேட்ட கேள்விக்கு “அனைவரும் இதை தான் கேட்க்கிறார்கள் நான் இப்போதுதான் கல்லூரி முடித்தது போன்ற உணர்வில் இருக்கிறேன் திருமணம் குறித்து யோசிக்க சில ஆண்டுகள் ஆகும்” என தெரிவித்துள்ளார் பாலாஜி முருகதாஸின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
bigg boss tamil fame balaji murugadoss opens up about his marriage