பிக்பாஸ் 4 : டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நம்பர் 7 ! ஹவுஸ்மேட்ஸ் அசத்தல்
By Sakthi Priyan | Galatta | January 07, 2021 09:13 AM IST
பிக்பாஸ் சீசன் 4-ல் டிக்கட் டு ஃபினாலே யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் பல கடினமான டாஸ்குகள் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தின் ஐந்தாவது டாஸ்காக ரிங் அண்ட் பால் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் கையில் வளையத்திற்குள் பந்தை வைத்து சுழற்றவேண்டும் என சொல்லப்பட்டது. அதில் பந்து நின்றுவிட்டாலோ அல்லது கீழே விழுந்துவிட்டாலோ போட்டியாளர் வெளியேற்றப்படுவார்கள்.
இந்த டாஸ்கில் முதலிடத்திற்காக பாலாஜி மற்றும் ரியோ இடையே கடும் போட்டி நடந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருவரும் விடாமல் பந்தை வைத்து சுற்றினர். இறுதியில் பாலாஜி பந்தை கீழே தவறவிட்டதால் ரியோ தான் இந்த டாஸ்கை ஜெயித்தார். அடுத்த டாஸ்க் சற்று வித்யாசமாக கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் ஒருவரை பற்றி மற்றொருவர் குறை சொல்ல வேண்டும் என கூறப்பட்டது.
முதல் ஆளாக ஆரி வந்து அனைவர் மீது குறை கூறி வெளுத்து வாங்கிவிட்டார். ரியோ தொடங்கி ஒவ்வொரு போட்டியாளரை பற்றியும் அவர் அதிகம் குறை கூறினார். பாலாஜிக்கு அவர் இதன் மூலமாக அட்வைசும் கொடுத்தார். உன் வயதில் நான் வாய்ப்பு தேடி ரோடு ரோடாக அலைந்து கொண்டிருந்தேன். நீயும் எந்த பின்னையும் இல்லாமல் தான் உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறாய். பல இடங்களில் கோபப்பட்டு நீ மற்றவர்கள் பேசுவதை கேட்பதே இல்லை என ஆரி கூறினார்.
இந்த குறை சொல்லும் டாஸ்கில் ஆரியை பற்றி தான் பலரும் அதிகம் குற்றச்சாட்டுகளை கூறினர். சோம் பேசும்போது ஆரியை பிக் பாஸ் வீட்டின் மற்றொரு கேமரா என விமர்சித்தார். இப்போது தான் குறை சொல்லும் டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆரி முதல் நாளில் இருந்தே அதை செய்துகொண்டிருக்கிறார். மற்றவர்கள் பற்றி என்னிடம் கூறும் அவர், என்னை பற்றி மற்றவர்களிடம் என்று போட்டுடைத்தார்.
ரியோ பேசும்போது ஆரி பேசும்போது சுருக்கமாக பேச வேண்டும் என கூறினார். ஒரு மனிதனால் 45 நிமிடம்மட்டுமே கவனிக்க முடியும். அதனால் ஆரி பேசும் விஷயத்தை சுருக்கமாக பேசி முடித்தால் அவர் முன் யாருமே நிற்க முடியாது என விமர்சித்தார். ரம்யா பேசும்போது ஆரி தான் விளையாடுவது மட்டும் தான் சரி என நினைக்கிறேன். அடுத்தவர்கள் மீது குறை கண்டுபிடிப்பதே அவரது பிளஸ் என நினைக்கிறார். அடுத்தவர்கள் மீது எதோ ஒரு குறையை கொண்டு வந்து சொல்லி வாயடைத்துவிட்டீர்கள்.
வீட்டில் ஒருவர் ஐந்து பேரை influence செய்கிறார் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் பல கோடி மக்களை influence செய்கிறீர்கள் என நான் சொல்கிறேன் என ஆரியை விமர்சித்தார் ரம்யா. மேலும் பாலாஜி பேசும்போது ஆரி அடுத்தவர்கள் நெகட்டிவ் வைத்து விளையாடாதீர்கள். பாசிட்டிவ் உடன் உங்களது பாசிட்டிவ் வைத்து விளையாடுங்கள் என கூறினார்.
இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், டிக்கெட் டு ஃபினாலேவின் ஏழாம் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பந்துகளை வளையத்திற்குள் வைத்து விட்டு, பிறகு மற்றோரு புறம் இருக்கும் பந்துகளை நிரப்ப வேண்டும். இதில் இறுதி வரை போராடி கேபி மற்றும் சோம் வெற்றி பெறுகின்றனர். ட்ராவான இந்த போட்டியை 3-ம் நடுவருக்கு கொண்டு செல்கிறார் பிக்பாஸ்.