முகநூல் அக்கௌன்ட் ஹேக்கானது குறித்து பிக்பாஸ் பிரபலம் பதிவு !
By | Galatta | October 23, 2020 11:34 AM IST
ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி. அதன் பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
சாக்ஷி பதிவிடும் ஃபிட்னஸ் டிப்ஸால் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலம் கூடியது. தமிழ் மக்களிடையே பிரபலமான முகமாக சாக்ஷி மாறினார். சில படங்களில் பிறருக்கு டப்பிங் கொடுத்துள்ளார் சாக்ஷி. பல விழா மேடைகளில் இவர் நடனமாடியுள்ளார். சென்ற லாக்டவுன் நேரத்தில் ஜிம் மூடப்பட்டு இருந்ததால் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வீடியோக்களை வெளியிட்டார் சாக்ஷி. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் வாசிகள் பகிர்ந்து வைரலாக்கினர்.
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்திலும் சாக்ஷி நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டெடி. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளது. ஆர்யா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர். விவேக் முக்கிய ரோலில் நடித்துள்ளார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சில நாட்கள் முன்பு இயக்குனர் SA சந்திரசேகர் இயக்கத்தில் துவங்கியுள்ள புதிய ப்ராஜெக்ட்டில் இணைந்தார் சாக்ஷி அகர்வால். சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கும் இந்த ப்ராஜெக்ட் வெப் சீரிஸா அல்லது திரைப்படமா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலின் முகநூல் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பதறி விட்டனர். பின் தேவையற்ற பதிவுகளை நீக்கி அந்த அக்கௌன்ட்டை மீட்டுள்ளார் சாக்ஷி. பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதை தடுக்க சைபர் க்ரைம் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.