விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

இது தொடர்பாக கங்கணா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் நாங்கள் வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான தலைவியின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம், எனக்கு ரத்தமும் சதையுமாகக் கிடைத்தது. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு. தலைவி படக்குழுவினருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். 

படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடித்து வருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தலைவி குழு தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், படம் குறித்து நடிகர் அரவிந்த் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது, தலைவி படத்தில் புரட்சித்தலைவரின் அழகையும், கவர்ச்சியையும் என்னில் கொண்டுவர உதவிய இவர், இறுதியாக எனக்கு மேக் அப் போட்டுக்கொண்டிருக்கிறார். நன்றி ரஷித் சார். தலைவியின் இறுதிநாள் படப்பிடிப்பு என்று அவர் பதிவிட்டார்.

ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு மதன் கார்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார். 

ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போட்டுக்கொண்டார் கங்கனா. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றியுள்ளார் என்ற தகவலும் கிடைத்தது. மேலும் இப்படத்திற்காக 20 கிலோ எடையை கூட்டியுள்ளார் கங்கனா. இந்த ட்ரான்ஸ்பர்மேஷன் நிச்சயம் திரை ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.