காலில் பலத்த அடி ! DD வெளியிட்ட புகைப்படம்
By Sakthi Priyan | Galatta | April 28, 2020 18:35 PM IST
நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை பெற்றவர் டிடி. இசை, நடனம், காமெடி என பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரது இயல்பான நகைச்சுவையால் திரைப்பிரபலங்களையும் ரசிகர்களாக மாற்றியவர். சின்னத்திரை மட்டுமல்லாமல் நள தமயந்தி, பவர் பாண்டி போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்தார்.
டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், இடது காலில் கட்டுப்போடப்பட்டிருக்கும் நிலையில் வாக்கிங் ஸ்டாண்ட் ஒன்றை பிடித்தபடி உள்ளார். அப்பதிவில், கடந்த சில வாரங்களாக இப்படித் தான் இருக்கிறேன். லாக்டவுனிற்கு பிறகு இது நடந்தது. எனது இடது கால் பாதத்தில் முறிவு ஏற்பட்டது. இதிலிருந்து என் மனதை மாற்ற முயற்சி செய்தேன். எழுதுவது, OTTயில் நேரம் செலவிடுவது உள்ளிட்டவற்றை செய்து வருகிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக பலம் பெற்று இந்த பதிவை எழுதியுள்ளேன். இதிலிருந்து சீக்கிரமே மீண்டு உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். டிடி விரைவில் குணமடைவீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.