உடற்பயிற்சி செய்கையில் வீடியோ எடுப்பது எப்படி ? கற்றுத்தரும் தமன்னா
By Sakthi Priyan | Galatta | April 11, 2020 13:21 PM IST
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். தங்கள் ரசிகர்களுடன் லைவ்வில் தோன்றி பேசி வருகின்றனர்.
குறிப்பாக நடிகைகள், வீட்டு வேலை செய்வது, வீட்டை சுத்தப்படுத்துவது, வார்ட்ரோப்பை ஒழுங்கு படுத்துவது, சமையல் கற்றுக் கொள்வது, வொர்க் அவுட் செய்வது என்று தங்களை பரபரப்பாக வைத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் தமன்னா தன் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஜிம் ட்ரெயினரோட டிஜிட்டல் பயிற்சி செய்வது கூட சவாலில்லை... ஆனா இந்த ஃபோன் கீழ விழாம பொசிஷனில் வைப்பது தான் மிகப்பெரிய சவால் என்று கூறியுள்ளார்.
டிஷ்யூ பேப்பர் பாக்ஸ் அல்லது பழங்கள் வைக்கும் ட்ரே - இந்த ரெண்டும் இப்போதைக்கு உதவியா இருக்கு. ட்ரைபாடுக்கு பதிலா இதை ட்ரை பண்ணுங்க. இந்த லாக்-ட்வுன் சமயத்தில என்னோட உடற்பயிற்சிக்கு இதுதான் ரொம்ப உதவியா இருக்கு. இந்த மாதிரி புது சிந்தனைகள் யோசிங்க, ஸ்மார்ட்டா இருங்க என்று வீடியோ பதிவில் கூறியுள்ளார் தமன்னா.