தடுப்பூசியைப் பற்றி பயப்பட வேண்டாம் நான் தடுப்பூசியை நம்புகிறேன் நீங்களும் நம்ப வேண்டும் - நடிகர் சித்தார்த்
By | Galatta | May 03, 2021 00:07 AM IST
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். ஆரம்பத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த சித்தார்த், பிறகு நடிகராக ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ், மணிரத்தினம் இயக்கத்தில் ஆயுத எழுத்து தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் ஹிந்தியில் பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் இணைந்து ரங் தே பசந்தி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என 4 மொழிகளிலும் நடித்துள்ள நடிகர் சித்தார்த் தயாரிப்பாளராகவும் தமிழில் 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
வெள்ளத்தில் சென்னை தத்தளித்த போது ஒரு சினிமா நடிகர் என்ற எந்த இமேஜும் பார்க்காமல் இறங்கிவந்து மக்களுக்காக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார் சித்தார்த். தொடர்ந்து தமிழ்நாடு இந்தியாவில் நடைபெறும் சமூக பிரச்சனைகளை பற்றி அவருடைய கருத்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவிட்டு வருகிறார். நீட் , விவசாயிகள் பிரச்சினை, புதிய கல்விக் கொள்கை, சி ஏ ஏ என சமூகத்தில் தொடர்ந்து விவாதத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தன்னுடைய வாதத்தை பகிர்ந்து வருகிறார் நடிகர் சித்தார்த்.
சென்ற வருடம் கொரானாவின் முதல் அலை ஆரம்பித்து ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து தொடர்ந்து கொரோனா பற்றிய விழிப்புணர்வு, பாதுகாப்புகள் பற்றி பதிவிட்டு வந்த நடிகர் சித்தார்த், அவ்வபோது அரசாங்கத்தின் மீதான அவருடைய அதிருப்தியையும் பதிவிட ஆரம்பித்தார். தொடர்ந்து தன்னுடைய பதிவுகளின் வாயிலாக மத்திய அரசை கண்டித்து விமர்சனங்களை எழுப்பி வந்தார் நடிகர் சித்தார்த். சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் அவர் - "Vaccine enga da dei" என பதிவிட்டிருந்தார். நாடு முழுவதும் covid-19 கோனார் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் இந்த வேளையில் உலகமெங்கும் குரல் உணவிற்கான தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சித்தார்த்தன் இந்தப்பதிவு தடுப்பூசி பற்றாக்குறையைப் பற்றி கேள்வி எழுப்பும் விதமாக அமைந்தது. இதனால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகர் சித்தார்த்.
இந்நிலையில் நேற்று தனது பெற்றோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பது குறித்தும் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் " என் வயதான பெற்றோருக்கு தடுப்பூசி போட்டு உள்ளேன். அவர்கள் தான் என்னுடைய வாழ்க்கை. “நான் தடுப்பூசியை நம்புகிறேன் நீங்களும் நம்புங்கள்” தயவுசெய்து தடுப்பூசியைப் பற்றி பயப்பட வேண்டாம். கட்டாயமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. ஒவ்வொருவரின் உடல் நிலையும் வேறுபட்டதாக இருக்கும் எனவே தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுங்கள்" என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் அனைத்தும் மக்களால் கவனிக்கப்படுகிறது.
இதன் மூலமாக நடிகர் சித்தார்த் பலரின் பாராட்டுகளைப் பெற்றாலும் சில எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
I have vaccinated my elderly parents. They are my life. I trust the vaccine. You should too.
— Siddharth (@Actor_Siddharth) May 1, 2021
Please don't be afraid about the #vaccine. It is perfectly safe to take. Just consult any physician once before you get the shot. Each individual is different. So do your due diligence.