ரசிகர்களை மிரள வைத்த ஃபகத் ஃபாசில்!-மிரட்டலான வீடியோ இதோ!
By Anand S | Galatta | July 18, 2021 19:29 PM IST
மலையாள திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் ஃபகத் ஃபாசில் கேரளா கஃபே, காக்டைல், டைமன்ட் நெக்லஸ், ஞான் பிரகாசன், பெங்களூர் டேஸ், அதிரன், டிரான்ஸ் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக திகழ்கிறார்.
தமிழில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த வேலைக்காரன் மற்றும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கடைசியாக ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான சீ யூ சூன் , இருள், ஜோஜி ஆகிய திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் . மேலும் நடிகர் ஃபகத் ஃபாசில் தெலுங்கு ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் புஷ்பா படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாலிக் மலையாள திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. மலையாளம் & தமிழ் என அனைத்து ரசிகர்களும் மாலிக் படத்தில் ஃபகத் ஃபாசிலின் நடிப்பை பாராட்டி வரும் நிலையில் மாலிக் படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பதைபதைக்கும் ஒரு ஆக்ஷன் காட்சியில் மிரள வைக்கும் விதத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் இந்த ஆக்ஷன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
— Anto Joseph (@IamAntoJoseph) July 17, 2021