அவரை ரொம்ப மிஸ் பண்ணுவேன்!-நடிகர் ஆதி உருக்கம்!!!
By Anand S | Galatta | July 06, 2021 17:41 PM IST
ஒக்க வி சித்திரம் எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமான நடிகர் ஆதி, தமிழில் இயக்குனர் சாமி இயக்கத்தில் உருவான மிருகம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ஈரம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தார்.
தொடர்ந்து அய்யனார், அரவான், யாகாவாராயினும் நாகாக்க , மரகத நாணயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த சரிநோடு மற்றும் ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல தெலுங்கு திரைப்படங்களில் வில்லனாகவும் மிரட்டி இருந்தார். கடைசியாக நடிகை சமந்தாவுடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான யுடர்ன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிகர் ஆதி நடித்துள்ள குட்லக் சகி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகர் ஆதியின் தந்தையுடைய அசோசியேட் இயக்குனர் திரு.ஸ்ரீகாந்த் அவர்களின் மறைவு நடிகர் ஆதி குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஆதி, என் தந்தையுடன் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் திரு.ஸ்ரீகாந்த். நான் குழந்தையாக இருக்கும் போது அவரோடு அதிக நேரம் இருந்திருக்கிறேன். எப்போதும் பாசிட்டிவ் ஆக இருப்பார். அவருடைய சிரிப்பை நான் மிகவும் மிஸ் பண்ணுவேன். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் ஸ்ரீகாந்த் மாமா என தெரிவித்துள்ளார். மறைந்த அசோசியேட் இயக்குனர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Mr. Srikanth worked as an Associate Director with my dad. I would spent a lot of time with him as a kid. He was always positive, always uplifting those around him. Will miss his smile, his presence and all the memories we shared. Rest in peace, Srikanth uncle. pic.twitter.com/ZshkV8KVYU
— Aadhi🎭 (@AadhiOfficial) July 6, 2021
SHOCKING: Award-winning director's son dies after a tragic bike accident!
06/07/2021 04:27 PM
"Will miss him... Rest in peace", Aadhi Pinisetty's latest emotional statement!
06/07/2021 02:36 PM