Vendhu Thanindhathu Kaadu Movie Cast & Crew
மாநாடு படத்தோட மாஸா கம்பேக் கொடுத்த நம்ம சிலம்பரசன் TR நடிச்சு அடுத்த படமான வெந்து தணிந்தது காடு படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கு.கெளதம் மேனன்,ஏ ஆர் ரஹ்மான் கூட சிம்பு கூட்டணி வைக்குற மூணாவது படம் , சிம்புவோட வித்தியாசமான லுக்ன்னு படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.தலைவன் செம ஃபார்ம்ல இருக்கான்னு ட்ரைலர் பார்த்து வெறி ஏத்திட்டு ரசிகர்கள் எல்லாரும் முதல் நாள் முதல் ஷோவுக்கு ரெடி ஆனாங்க அதே மாதிரி சினிமா ரசிகர்களா நாங்களும் ரெடி ஆனோம்,இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்க இந்த படம் ரசிகர்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுதா இல்லையா அப்படிங்கிறத இப்போ பார்க்கலாம்
திருநெல்வேலி பக்கத்துல டிகிரி படிச்சுட்டு தன்னோட குடும்ப சூழ்நிலையை முன்னேத்த கஷ்டப்பட்டு வேலை செஞ்சுட்டு இருக்குற முத்துவீரனாக சிம்பு.அவரோட ஜாதகத்துல இருக்குற பிரச்சனை,அவரோட முரட்டு சுபாவம் இதெல்லாம் பார்த்து அவரை குடும்பத்தையும்,ஊரையும் விட்டு தள்ளிப்போய் வேலைபார்க்க தனக்கு நெருங்கிய சொந்தக்காரன் மூலமா மும்பைக்கு அனுப்ப முடிவு பன்றாங்க முத்துவோட அம்மாவான ராதிகா.வேலைக்கு போற இடத்துல வர சில பிரச்சனைகள் அவரை ரௌடியாக்குது.அந்த வாழ்க்கை வேண்டாம் , நிம்மதியா ஒரு வாழ்க்கை வேணும்னு நினைக்கிற முத்துவீரன் வாழ்க்கைல அடுத்து என்ன நடக்குது அப்படிங்கிறது மீதிக்கதை.
கதையோட நாயகன் முத்துவீரனா சிலம்பரசன் , ஒரு அப்பாவி இளைஞராகவும் , கோவரக்கார இளைஞராகவும் நடிப்புல வித்தியாசம் காட்டி தன்னோட எதார்த்தமான நடிப்பால நம்மளை மிரள வைக்கிறாரு.ஆக்ஷன்,ரொமான்ஸ்,செண்டிமெண்ட்ன்னு பல இடங்கள்ல சிங்கிள் ஷாட்ல அசத்தி பட்டையை கிளப்பியிருக்காரு.
சித்தி இத்னானி வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயினா வர்றாங்க , ரெண்டு பாட்டு,ஒரு கடத்தல் சீன்-ன்னு வழக்கமான Template-ல நடிச்சுட்டு போயிருக்காங்க.ராதிகா சரத்குமார்,அப்புக்குட்டி,நீரஜ் மாதவ் இன்னும் பல நடிகர்கள் நடிச்சிருக்காங்க.அவங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவங்க சரியா செஞ்சுருக்காங்க,இருந்தாலும் பல பெரிய நடிகர்கள் ஒரு ரெண்டு சீன் மட்டுமே வர்றாங்க அவங்களோட கதாபாத்திரத்துக்கான Depth இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.
இயக்குனர் கெளதம் மேனன் இந்த முறை வித்தியாசமான ஒரு ஸ்கிரிப்ட் தன்னோட பாணியை விட்டு வெளிய வந்து எடுத்துருக்காரு.நமக்கு கொஞ்சம் பழக்கப்பட்ட கேங்ஸ்டர் படம்னாலும் கெளதம் மேனன் சில காட்சிகளை கையாண்ட விதம் ரொம்ப அழகா இருந்தது.சிங்கிள் ஷாட்டில் பல காட்சிகளை படமாக்கிருக்காங்க,இது டீமோட பிளானிங்கை காட்டுது.அதே நேரம் படத்தோட Length , கதை விறுவிறுப்பா நகர்ந்துட்டு இருக்குறப்போ லவ் போர்ஷன் வர்றது கதையோட ஸ்பீட்டை குறைக்குது.படத்தோட கிளைமாக்ஸ் எப்படி முடிக்கணும் அப்படிங்கிறது கெளதம் மேனனுக்கு எப்பயுமே ஒரு பிரச்னையா இருக்குறது கடந்த சில படங்களால நம்மளால பார்க்க முடியுது.கிளைமாக்ஸ்ல வைக்குற பார்ட் 2-வுக்கான லீட் பாக்குறதுக்கு ஸ்டைலாக இருந்தாலும் , இந்த படத்துல சேர்த்துருக்கணுமான்னு ஒரு கேள்வியை எழுப்புது.
கதைக்கு பக்கபலமா சிம்புவுக்கு அடுத்து படத்தை பல இடங்கள்ல காப்பாத்துறது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தான்.அவரோட பாடல்கள் , பின்னணி இசை வரப்போலாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறத நம்மளால பார்க்க முடியுது.இன்டெர்வல் சண்டை காட்சில வர்ற Rap பாடல் ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பை பெரும்ன்னு எதிர்பார்க்குறோம்.சித்தார்த்தா நுனி,ஆன்டனி தங்களோட கேமரா மற்றும் எடிட்டிங் Department-ல அவங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பா செஞ்சுருக்காங்க.கதையோட ஓட்டத்தை மனசுல வெச்சு சில காட்சிகளை நீக்கிருந்த இன்னும் தரமான ஒரு ஆக்ஷன் படமா இந்த படம் வந்துருக்கும்.
மொத்தத்துல ஒரு தரமான டான் கதையாக வந்திருக்க வேண்டியது இரண்டாம் பாதில இருக்குற சில சறுக்கல்கள்னால ஒரு தடவை பார்க்கக்கூடிய ஓகேவான படமா அமைஞ்சுருக்கு.
Verdict: வெந்து தணிந்தது காடு...சிம்பு performance,ரஹ்மான் மியூசிக் ரெண்டுக்கும் வணக்கத்தை போடு