இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் சாஹோ. அயல்நாட்டில் வாழும் கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், ராய் நிறுவனத்தின் உரிமையாளராகவும் வருகிறார் ஜாக்கி ஷெராஃப். விலைமதிப்பற்ற பிளாக் பாக்ஸை மும்பையில் வாங்கிகொண்டு மகனை பார்க்கச்செல்லும் வழியில் இறந்துவிடுகிறார். தந்தையை கொன்றவர்களை பழிவாங்க வரும் நாயகன் என்னனென்ன செய்கிறார் என்பது தான் கதைச்சுருக்கம்.
முதல் பாதியில் ரசிக்கும் படியான மாஸ் போலீஸாக வருகிறார் பிரபாஸ். இரண்டாம் பாதியில் சாஹோவாக தோன்றி சரவெடி வெடிக்கிறார். பிரபாஸிற்கு இணையாக ஆக்ஷனில் அசத்தியிருக்கிறார் ஷ்ரத்தா கபூர். அதிக நேரம் ட்ராவல் செய்தாலும் வலுவான பாத்திரம் இல்லை. பிரபாஸின் காதலியாக கச்சிதமாக தோன்றியுள்ளார்.
வில்லனாக சில நேரம் திரையில் தோன்றினாலும் அளித்த வேலையை சரியாக செய்துள்ளார் அருண் விஜய். மெடுக்கான கோட், சூட்டுடன் ஸ்டைலாக தெரிகிறார். வெளிப்படையாக கூற வேண்டுமானால் பிரபாஸை விட தனது ரோலில் ஃபிட் ஆகியிருந்தார் அருண்விஜய்.
படத்தின் பின்னணி இசை பின்னடைவு தான் என்று கூற வேண்டும். அதிக சத்தத்துடன் செவிகளுக்கு இடையூறாகவே இருந்தது. அனிருத் பாடிய காதல் சைக்கோ பாடலை தவிற வேறெதுவும் சொல்லும் படி இல்லை. வசனங்களில் கூர்மை இருக்க வேண்டும் என்று ஓவர் டோஸ் ஏற்றியுள்ளனர்.
அதிக பட்ஜெட் இருக்கும் ஆக்ஷன் படத்தை உருவாக்கியுள்ளனர், ஆனால் கதையில் கவனம் செலுத்த தவறி விட்டனர். அச்சு அசலாக ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், டான் 2 படங்களின் சாயல் தெரிகிறது. எளிதில் கண்டுபிடிக்கும் அளவிற்கு ட்விஸ்டுகள் இருந்தாலும் படத்தின் வேகத்தை கூட்டவில்லை. ஆக்ஷன் படம் என்றால் சண்டை காட்சிகள் இருப்பது சகஜம் தான். பறக்கும் காட்சிகளை பார்க்கும் போது நம்பகத்தன்மையை மீறி உள்ளது.
ஒளிப்பதிவாளருக்கு டாப் அங்கிள் ஷாட்ஸான ஏரியல் ஷாட்ஸ் தவிற ஏதும் தெரியாது போல. எடிட்டிங் ஏற்றவாறு இருந்தது. மொத்தத்தில் அனைவரும் யூகிக்கும் வகையில் உள்ளது இந்த சாஹோ.
Verdict: பாகுபலி பார்த்து விட்டு இப்படத்தை பார்க்கும் பிரபாஸ் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமே.