Namma Veettu Pillai Movie Cast & Crew
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, நட்டி, சமுத்திரகணி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை. படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு ஃபிரம் முழுக்க நம்ம வீட்டு பிள்ளையாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அரும்பொன் எனும் பாத்திரத்தில் துளசியின் அண்ணனாகவும், மாங்கணியின் மண்ணனாகவும் தோன்றி அசத்தியுள்ளார் SK.
அன்பு நிறைந்த அண்ணன்-தங்கை பாசம் தான் படத்தின் மூலக்கதை. சுளுக்கெடுக்கும் நிபுணராக இருக்கும் பாரதிராஜாவின் குடும்பத்தை சுற்றி வருகிறது கதை. வாழ்க்கையில் அதிகமான இன்பத்தை தருவதும் சொந்தம் தான், துன்பத்தில் தள்ளுவதும் சொந்தம் தான் எனும் முடிச்சை ஆணிவேறாக வைத்து அழகாக கோர்த்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். பந்தங்களின் அருமையை பந்தக்காலாக வைத்து செதுக்கியது பிரமாதம்.
குடும்ப உணர்வுகளை கொண்ட முதல் பாதியும், ஃபிளாஷ்பாக் நிறைந்த இரண்டாம் பாதி என்று விறுவிறுப்பாக நகர்கிறது. எமோஷன் நிறைந்த கிராமத்து சப்ஜெக்ட் என்பதால் பாத்திரங்களை கச்சிதமாக வடிவமைத்துள்ளனர் படக்குழுவினர். அண்ணன், பெரியப்பா, சித்தப்பா, அத்தாச்சி, அப்பத்தா என்று உறவுகளை வைத்தே உரையாடியுள்ளார் இயக்குனர்.
எதார்த்தமான சிவகார்த்திகேயனுக்கும் எமோஷன் நிறைந்த எங்க அண்ணன் சிவகார்த்திகேயன் பலே. மண்வாசனை நிறைந்த படங்கள் நடிகர் சூரிக்கு ஹோம் கிரௌண்ட் என்றே கூறலாம். யோகிபாபு இல்லாமல் படம் இல்லை என்பதை மீண்டும் செய்துகாட்டியுள்ளனர். சிறிது நேரம் வந்தாலும் அவரது ஒன்-லைன் பிரமாதம். மச்சானை மதிக்காமல் நடக்கும் மாமனாக வந்துள்ளார் நட்டி. படமுழுக்க அரும்பொன்னின் மைலாஞ்சியாக அசத்தியுள்ளார் அணு இம்மானுவேல். இரண்டாம் பாதியில் வரும் RK சுரேஷ் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பு இயல்பின் உச்சம்.
பின்னணி இசை துவங்கி பாடல்கள் பட்டையை கிளப்பச்செய்திருக்கிறார் இமான். குறிப்பாக மைலாஞ்சி, குமுறுடுப்புற பாடல் செவிக்கு தேனாய் அமைந்தது. ஸ்டண்ட் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்திய நாயகனுக்கு கூடுதல் பாராட்டு. ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் ஜிகிரு தோஸ்த்து பாடல் சற்று சலிப்பை தந்தாலும் கமெர்ஷியல் களத்துக்கு ஏற்றவாறு இருந்தது.
Verdict: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமையும் இந்த நம்ம வீட்டு பிள்ளை.சொந்தங்கள் மத்தியில் தோற்க்க நினைக்கும் எவரும் வாழ்வில் தோற்றதில்லை எனும் சீரான கருத்தை அரும்பொன் வாயிலாக உணர்த்தியுள்ளார் பாண்டிராஜ்.