Darbar Movie Cast & Crew
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தர்பார்.இன்று திரைக்கு வந்துள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்க்கலாம்.
27 வருடங்களுக்கு முன் ஒரு ரௌடி தன்னை பிடிக்க வந்த 17 போலீசாரை எரித்து கொன்றுவிட்டு தப்பிவிட்டு தற்போது பெரிய டானாக உயர்ந்து நிற்கும் வில்லன்.அப்போதிருந்து.மும்பையில் ரௌடிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்க போதை பொருள் விற்பனையும்,பெண்களை கடத்துவதும் வழக்கமாக நடந்து வருகிறது.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர டெல்லியில் பிரபல போலீசாக இருக்கும் ஆதித்யா அருணாச்சலத்தை மும்பைக்கு மாற்றுகிறது அரசு.மும்பையில் ரௌடிகளின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டதா ? போலீஸின் மீதான மக்களின் நம்பிக்கை உயர்ந்ததா ? வில்லனை ஹீரோ கைது செய்தாரா இல்லையா என்பது மீதிக்கதை.
கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து சூப்பர்ஸ்டார் போலீசாக திரையில் தோன்றுகிறார்.என்றாலும் கதையின் முதுகெலும்பாக இருந்து ஒவ்வொரு காட்சியையும் தூக்கி நிறுத்துகிறார்.ரஜினி என்னும் டைட்டில் கார்டில் தொடங்கி அவர் வரும் ஒவ்வொரு பிரேமிலும் ரசிகர்களின் விசில் சத்தம் பறக்கிறது.படையப்பா படத்தில் அப்பாஸ் சொல்வதை இவருக்கு எப்போதும் வயசாகாது.
சுனில் ஷெட்டி இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.ரஜினிக்கு நிகரான ஒரு வில்லனாக இவர் உருவெடுக்கவில்லை.நயன்தாரா எப்போதும் போல் அழககாக இருக்கிறார்,இந்த படத்தில் வழக்கமான ஹீரோயினாக வந்து ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்து இரண்டு பாடல்களுக்கு வந்து செல்வதை தவிர அவருக்கு பெரிதாக வேலை இல்லை.யோகி பாபு தனது ஒன்லைன் மூலம் நம்மை அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.நிவேதா தாமஸ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் அழகாக செய்துள்ளார்.டான்ஸ்,காமெடி.எமோஷன் என்று தன்னால் முடிந்தளவு தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தன்னால் முடிந்தளவு ரஜினியை வைத்து ஒரு மாஸ் மசாலா படத்தை கொடுத்துள்ளார்.முதல் பாதியில் விறுவிறுவென சென்ற கதை இரண்டாவது பாதியில் ஸ்லோவானது படத்தின் ஓட்டத்தை சற்று குறைத்தது.திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் விறுவிறுப்பான ஒரு போலீஸ் ஆக்ஷன் படத்தை கொடுத்திருக்கலாம்.முருகதாஸ் படங்களில் வசனம் எப்போதும் கவனத்தை ஈர்க்கும் படி இருக்கும் இந்த படத்தில் அப்படி ஏதும் இல்லை.அங்கங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசிகர்களின் நாடி அறிந்து அவர்கள் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் படத்தை முருகதாஸ் உருவாக்கியுள்ளார்.
இந்த படத்தின் மற்றுமொரு பக்கபலம் அனிருத்தின் இசை.ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆன நிலையில் தனது பின்னணி இசையால் கதையின் ஓட்டத்தை சுறுசுறுப்பாகுகிறார்.தலைவர் தீம் வரும்போதெல்லாம் தியேட்டர் விசில் சத்தத்தால் நிறைகிறது.கண்ணுல திமிரு வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து.சந்தோஷ் சிவன் வழக்கம் போல் தனது வித்தியாசமான கேமரா திறமையால் நம்மை கவர்கிறார்.சில இடங்களில் மேக்கப் ஒற்றுப்போகாமல் இருந்தது அதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஸ்ரீகர் பிரசாத் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது என்றாலும் இரண்டாம் பாதி திரைக்கதை சற்று தொய்வை சந்தித்தது.சில காட்சிகளை நீக்கியிருந்தால் படத்தின் விறுவிறுப்பை இன்னும் கூட்டியிருக்கும்.
இது சூப்பர்ஸ்டாரின் தர்பார் பொங்கலுக்கு குடும்பத்தினருடன் நல்ல ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான மாஸ் மசாலா படத்தை பொங்கல் விருந்தாக கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.
Verdict: சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் தர்பார் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து