ACCUSED NO 1 திரை விமர்சனம் ! Movie Review (2019)

26-07-2019
K Johnson
Accused No.1 Movie Review

Accused No.1 Movie Cast & Crew

Cast : Santhanam, ,
Production : CircleBox Entertainment
Director : K Johnson
Music Director : Santhosh Narayanan

தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹீரோ சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் Accused No.1.நாளைய இயக்குனர் புகழ் ஜான்சன் கே இந்த படத்தை இயக்கியுள்ளார்.Circle Box என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.தில்லுக்கு துட்டு 2 படத்தை போல இந்த படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்று சந்தானத்திற்கு ஒரு வெற்றி படமாக அமையுமா என்பதை பார்க்கலாம்

 

 

ஒரு ஐயர் ரௌடியை திருமணம் செய்யவேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கும் ஹீரோயின்.சந்தானத்தின் மீது காதல் கொண்டு அவரை பெற்றோர் சம்மதத்துடன் மணக்க விரும்புகிறார்.ஆனால் இவர்களின் காதலுக்கு ஹீரோயினின் தந்தை எதிர்ப்புத்தெரிவிக்கிறார்.இதற்கு அடுத்து இருவரும் எப்படி ஒன்று சேருகின்றனர் என்பது மீதிக்கதை.

 

 

தமிழ் சினிமாவின் பார்த்து பழக்கப்பட்டு அடித்துத்துவைத்த கதையில் சந்தனத்தை ஹீரோவாக வைத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன்.சந்தானம் ஹீரோவாக செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்.தனது அக்மார்க் நக்கல்,நையாண்டி என சந்தானம் தூள் கிளப்பியுள்ளார்.ஆனாலும் நிமிடத்திற்கு நிமிடம் அவர் அடிக்கும் counterகளால் நமக்கு சலிப்பு தட்டுகிறது.

 

 

படத்தின் மிகப்பெரும் பலமாக இருப்பது சந்தானம் தான்.எப்போதும் ஒரு பெண்ணை காதலிப்பது அதில் வரும் பிரச்சனை என்றே சந்தானத்தின் எல்லா படங்களும் இருந்து வருகின்றன.இனிமேல் கதைத்தேர்வில் சற்று கவனம் செலுத்தி வித்தியாசமான கதைகளை சந்தானம் செலக்ட் செய்வாரா என்று பார்க்கலாம்.

 

 

எம்.எஸ்.பாஸ்கர்,பழைய ஜோக் தங்கதுரை,லொள்ளு சபா மனோஹர்,மொட்ட ராஜேந்திரன்,சாய் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.கோகோ, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த Redin கிங்ஸ்லி தனது வித்தியாசமான நடிப்பாலும்,நகைச்சுவையால் அனைவரையும் கவர்கிறார்.துணை நடிகர்கள் அனைவரும் ஆங்காங்கு வந்து நம்மை சிரிக்க வைத்து விட்டு செல்கின்றனர்.

 

 

பல இடங்களில் காமெடி பெரிதாக ஒர்கவுட் ஆகவில்லை குறிப்பாக நம்மை நிறைய இடங்களில் முகம்சுளிக்க வைக்கின்றனர்.அதுபோன்ற காமெடிகளை சற்று தவிர்த்திருக்கலாம்.இண்டெர்வலுக்கு பிறகு வரும் சந்தானத்தின் counterகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் நாயகி தாரா அலிஷா ஐயர் பொண்ணு கேரக்டருக்கு சற்றும் செட் ஆகவில்லை.வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயினாக வந்து ஹீரோவுடன் டூயட் பாடி செல்கிறார்.சாய் குமார்,எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட சீனியர் நடிகர்களை இன்னும் திரையில் பயன்படுத்தியிருக்கலாம்.

 

 

இயக்குனர் ஜான்சன் தன்னால் முடிந்தளவு இந்த கதையில் காதல்,காமெடி,ரொமான்ஸ் என எல்லாவற்றையும் கலந்து ஒரு பக்கா ரொமான்டிக் காமெடி படத்தை அளிக்க முயன்றிருக்கிறார். திரைக்கதையிலும்,வசனங்களிலும் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஒரு நல்ல காமெடி படத்தினை கொடுத்திருக்கலாம்.சந்தோஷ் நாராயணனின் இசை இந்த படத்தில் பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை.பாடல்கள்,பின்னணி இசை என்று எல்லாமே சுமார் ரகம் தான்.

 

 

படத்தின் மிகப்பெரிய பிளஸ் படத்தின் ரன்டைம் 1 மணி நேரம் 58 நிமிடங்கள் மட்டுமே வைத்த எடிட்டர் லியோ ஜான்பாலுக்கு பாராட்டுக்கள்.ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான கேமரா வேலைகளை கனகச்சிதமாக செய்துள்ளார் கோபி ஜெகதீஸ்வரன்.

 

 

நமக்கு பழக்கப்பட்ட கதைக்களம் என்றாலும் திரைக்கதையில் புதுமையை கையாண்டிருந்தால் இன்னும் படத்தினை ரசித்திருக்கலாம்.மொத்தத்தில் 

Verdict: ஜாலியாக இரண்டு மணி நேரம் நண்பர்களுடன் சென்று பார்ப்பவர்களை சிரிக்கவைத்து அனுப்புகிறார் சந்தானம்

Galatta Rating: ( 2.25 /5.0 )



Rate Accused No.1 Movie - ( 0 )
Public/Audience Rating