இன்ஸ்டாகிராமில் 100 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, மோசடியாக பணம் பறித்து வந்த இளைஞனை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆரணியில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த 23 வயதான பாலாஜி என்ற இளைஞரு், சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்திருக்கிறார்.
இந்த சூழலில் தான், 23 வயதான பாலாஜியின் போட்டோவை பயன்படுத்தி, ஆரணியை சேர்ந்த பைரோஸ்கானின் மகன் 24 வயதான பயாஸ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் பல பெண்களிடமும் பழகி வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில், பல பெண்களிடமும் அந்த இளைஞன் காதல் வலைவீசி லட்சக் கணக்கில் பணத்தை பறித்து உள்ளார். இதனையடுத்து, பாதிக்கபட்ட பெண்கள்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்த போது, பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அதற்கு காரணம், பாலாஜியின் பெயரில், அவரது நண்பன் 24 வயதான பயாஸ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் பல பெண்களிடமும் பழகி வந்து, பணம் பறித்து வந்தது தெரிய வந்தது.
இதனால், பாதிக்கப்பட்ட பல பெண்களும், பாலஜிடம் முறையிடவே, இளம் பெண் போலவே, பயாஸ் என்ற இளைஞனுக்கு பாலஜி, குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர்.
அதன்படி, அவனை ஆரணி கோட்டை மைதானத்திற்கு வரவழைத்து உள்ளனர்.
அதன்படி, அந்த இளைஞனும் ஆரணி கோட்டை மைதானத்திற்கு வந்த நிலையில், அங்கு வந்த பாலாஜி, பயாசிடம் “நீ, என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி பல பெண்களிடம் நீ ஏமாற்றி பணம் பறிப்பதால், எனக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று கூறிவிட்டு திட்டிய நிலையில், உடனடியாக என் படத்தை நீக்கிவிடு” என்றும், கூறியிருக்கிறார்.
இதனால், ஆத்திரமடைந்த பயாஸ், பாலாஜியை தாக்கி “கொலை செய்துவிடுவேன்” என்று, மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாலஜி, ஆரணி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, பயாசை அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பயாஸ் செல்போனை சோதனை செய்து உள்ளனர்.
அப்போது, அவன் 100 க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு குறுஞ் செய்தி அனுப்பி வைத்து, அவர்களை தனது காதல் வலைவீசி வீழ்த்தி, அவர்களிடம் லட்ச கணக்கில் பணம் பறித்து வந்தது” தெரிய வந்தது.
இதனையடுத்து, பயாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவனை போளுர் கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும், இச்சம்பவத்தால் யார் யார் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று போலீசார் புது பட்டியலை தயார் செய்து வருகின்றனர். இச்சம்வம், ஆரணியில் பெரும் அதிர்ச்சியையம், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.